உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 95 வழியின்றி - அம்மாதிரி அவமானகரமான செயலைச் செய்து மந்திரி சபையை அமைத்தார்கள். காங்கிரசு எதிர்ப்பாளர்களை எல்லாம், எல்லாம், காங்கிரசுக்காரர்களாக ஆக்கி, அவர்கள் போட்டிருந்த அழகான பட்டுச் சொக்காய்களைக் கழற்றிவிட்டு, கதர் சட்டைகளை மாட்டி தலையிலே இருக்கிற கோளாறு தெரியாமலிருப் று பதற்காக தொப்பிகளையும் கவிழ்த்து ஆட்சிபீடம் ஏறினர். - இன்றைய தினம் அதே காங்கிரசு அதிக இடங் களைப் பெற்று, மந்திரி சபை அமைத்திருக்கிறது. அதனால் தான் இழந்ததைப் பெற்றவர்கள் என்கி றேன். ஆனால், உயர்ந்தவர்கள் - மதிப்புள்ளவர் கள் பெருமைப்படத்தக்க அளவுக்கு நடந்து கொண்டு பெற்றார்கள் அதிக இடங்களை என்று சொல்ல . முடியாது. அ 6 ரஷ்யா போன்ற மேல் நாடுகளிலே, இப்போது விஞ்ஞான ரீதியிலே புதியதொரு மருத்துவ முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறதாம். ஐம்பது வயதோ, அறுபது வயதோ ஆன, குடும்பத்தின் தலைவன் ஒரு வன் திடீரென்று அகால மரணமடைந்து விட்டால், சொத்துக்களைப் பற்றி எந்த விதமான உயிலும் எழு தாமல் மறைந்து விட்டால், ஐயோ! சொத்துக் களைப்பற்றி விவரம் சொல்லாமல் போய்விட்டாரே?" என்று கவலைப்படக் கூடிய நிலைமையை மாற்றியிருக் கிறார்கள். விஞ்ஞான ரீதியிலே, புதிய கண்டுபிடிப் பின் மூலமாக, இறந்து போனவனுக்கு அரைமணி நேரமோ - ஒருமணி நேரமேர உயிரை வரவழைத்து, அயர்ந்து கிடக்கின்ற சுவாசப் பையிலும், நிரந்தர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/95&oldid=1703644" இலிருந்து மீள்விக்கப்பட்டது