பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

திட சாஸ்திரத்திற்காதாரமாயுள்ளன. சூரியனாதி கோள்கள் மேடாதி ராசிகள் வராம், திதி, நட்சத்திரம் முதலியவைகளே. இவைகட்கெல்லாம் ஆதியாயும் ஆதாரமாயும் சோதிட கணிதசாஸ்திரத்திற்கு முக்கியமாகிய காலத்தையளக்குங் கருவியாயுமுள்ள சூரியனைக்கொண்டு அதிதுட்பமான காலமுதல் வினாடி, நாழிகை, ஓரை, முகூர்த்தம், சாமம், பகல், இரவு, நாள், வாரம், பக்கம், மாதம், இருது, அயனம்,. வருடம் ஆகிய காலப்பாகுபாடுகளை நுணுக்கமாகக் கணித்துக் கண்டறிவதற்கும், கிரகசாரசதிபேதங்களின் நிலைகளையறிந்து உலகஞ் சிவிப்பதற்காதாரமாகிய மழை, வெயில், காற்று முதலிய இயல்புகளை யுணர்ந்தோதுவற்கும், மக்கள் பிறக்கும் கால நுட்பங்களைக் கணித் தறிந்த இலக்கினம், இராசி, ஒரை, அமிசம் என்னும் பல பிரிவுகளில் கோள் நிலையமைப் புணர்ந்து தாய், தந்தை, சகோதாம், தாரம், மக்கள், யோகம், கண்டம், மரண கால முதலிய பன்னிரண்டு பாவகங்களிலுண்டாகும் பலன்களோடு கோட்சார முறையாகத் திசை, புத்தி, சித்திரம் முதலிய காலங்களிலீடுபட்டு பிறப்பு முதல் இறப்பு வரை நிகழும் சுகதுக்கமாகிய எல்லாவிதப்பலாபலன்களையுமறிந்துகொள்வ தற்கும், இந்துமதத் தள்ளிட்ட வெல்லாச் சமயத்தாரும் வைதிகமெ னக்கருதக்கூடிய செனனந்தொட்டு நடந்தேறும் வாழ்க்கைச் சடங் குகளாகிய சூதிகாக்கிருகமுதல் கல்வி, கலிபாணம், ருதுசாந்தி, சீமந்தம் முதலிய பூருவக்கிரியைகளையும், மாணந்தொட்டு நிகழும் சாச்சடங்குகளாகிய அந்தியேட்டி, திதி, தருப்பணம் முதலிய அபாக்கிரியை களையும் விதி விலக்குகளறிந்து நடத்தி உய்வதற்கும், எல்லாச் சமயத்தாருக்கும் பொதுவான தொழிற்றுறைகளாகிய விவசாயம், வியாபாரம், கைத்தொழில், உத்தியோகம் முதலிய பலவித இலௌகீக காரியங்களை ஏற்றகாலங்கண்டு செய்வதற்கும், மற்றும் பலவற்றிற்கும் சோதிடசாஸ்திரமே இன்றியமையாததாகக் கருதப்பெற்று வருதல் நம் அனுபவசித்தமேயாம்.

இவ்வண்ணம் வேற்றுமையின்றி எல்லா மக்களாலும் கையாளப்பெற்றுவரும் சோதிட விஷயமாக வடமொழியிலும், தென்மொழியிலும் எண்ணிறந்த நூல்களுள்ளன; அவற்றுள் உயர் தனிச் செம்மொழியாகிய தமிழுக்குத் தலைமைபூண்ட அகஸ்திய முனிவருக்கு