பக்கம்:சோனாவின் பயணம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



“அப்படியா! சரி, நம்முடைய நீண்ட கழுத்தால் என்ன பயன் ?” என்று மிகுந்த மகிழ்ச்சியோடு சோனா கேட்டது.

“நமது கால்கள் நீளமாக இருக்கின்றன. அதனால் கழுத்தும் நீளமாகத் தானே இருக்க வேண்டும்? இல்லாதுபோனல் எப்படி நாம் நிலத்தில் உள்ளதை எடுப்போம்? மேலும், நம் முடைய நீளமான கழுத்து உயரமான மரங்களில் உள்ள இலைகளைப் பறிக்கவும், வெகு தூரம் பார்க்கவும் உதவுகிறது. நம் முடைய திமில், நீளமான கால்கள், தட்டையான பாதம், நீண்ட கழுத்து - எல்லாமே நமக்கு மிகவும் பயன்படுகின்றன. அவைகளுக்காக நீ பெருமைப்பட வேண்டும்” என்று பதில் கூறியது அம்மா.

இப்போது, சோனா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. அம்மா தனக்காக ஒடித்து வைத்திருந்த பசுமையான இலைகளேயெல்லாம் சோனா தின்றது. பிறகு அது தூங்கி விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோனாவின்_பயணம்.pdf/20&oldid=482918" இலிருந்து மீள்விக்கப்பட்டது