பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புள்ளம் பூதங்குடிப் புனிதன் 135 சந்நிதியில் இன்றைக்கும் ஒருதிருப்புன்னை மரம் வளர்க்கப் பெற்று வருதல் அறியத்தக்கது). நாற்புறமும் கழனிகளில் உள்ள அழகிய நீல மலர்கள் வண்டுகள் கூட்டம் கூட்டமாக விருந்து உண்பதற்குத் தேனைப் பெருக்குகின்றன (7); காவிரிநதி ஒளியுடன் திகழும் நவமணிகளையும், மூங்கில் முத்துகளையும், சாமரங்களையும் பொன்னையும் தள்ளி வருகின்றன (9). சிறந்த வேலைப்பாடுகள் அமைந்த மதில்களாலும் மலை களினாலும், அழகிய இல்லங்களாலும், மாளிகைகளினாலும், அழகிய மண்டபங்களினாலும் சிறந்து காணப்பெறுகின்றது ஊர் (4); பொய்யா நாவில் வேதங்களை ஒதும் அந்தணர்கள் வாழ்கின்ற இடமாகும் இவ்வூர் (5); இவ்வூரில் வாழும் அந்தணர்கள் மறைகளை ஒதுவதுடன் முத்தீயை வளர்ப் பவர்கள்; இதனால் பெரும்புகழையும் பெற்றவர்கள்; பொறுமை யும் வள்ளண்மையும் இவர்தம் சிறந்த குணங்களாகும் (8). இத்தலத்து எம்பெருமானின் சிறப்பு எங்ங்னம் பேசப் பெறுகின்றது? என்பதையும் சிந்திப்போம். 'எவருக்கும் தம் முயற்சியால் அறியக் கூடாதவன் ; எல்லாவுலகங்கட்கும் நாதன்; என்னை அடிமையாகக் கொண்டவன்; வாமனமாணி உருவங் கொண்டு மாவலியின் யாகபூமியில் அழகிய நடையுடன் சென்றவன் (1); வாமன உருவத்துடன் சென்று மாவலியை வஞ்சித்து எல்லாவுலகங்களையும் சுவாதீனப்படுத்திக் கொண் டவன்; கஜேந்திரன் துன்பம் தவிர்த்த புனிதன் (2); குதிரை வடிவத்துடன் வந்து கேசி என்னும் அசுரனின் வாயைக் கீண்டவன்; கம்சன் நிறுத்திவைத்திருந்த சானுரன், முஷ்டிகன் என்ற மல்லர்களை வென்றவன்; தவழ்ந்து சென்று இரட்டை மருத மரங்களை முறித்துத் தள்ளினவன் (3); கோவர்த்தன மலையால் இந்திரனின் கல்மாரியைப் பழுதாக்கினவன்; இராவணனின் இருபது தோள்களையும் அறுத்தொழித்த வல்வில்லையுடைய இராமன் (4,7); யசோதைப் பிராட்டி எவர் கண்ணும் படாதபடி மறைத்து வைத்திருந்த தயிரையும் நெய்யை யும் குடம் பாலையும் களவு வழியினால் அமுது செய்து திருவாழி யைக் கையில் கொண்ட மாயன்(5), நப்பின்னைப் பிராட்டியை அடையும் பொருட்டு மன்னு சினத்த மழ விடைகளை வென்றொழித்தவன் (6); உருத்திரனைப் புறமுதுகிட்டோடச் செய்து வாணனின் ஆயிரந்தோள்களை அறுத்தெறிந்த பெருமான் (7); பாரதப் போரில் பாண்டவர்களின் பட்சபாதியாக