பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகை அழகியார் 163 (குறு ஏவல் கைங்கரியம்: சிந்தை-மனம்; ஆர்ந்ததற்கு எழுந்தருளி யிருப்பதற்கு: கைம்மாறு-பதில் உதவி, ஆழி. சுதர்சனம்; வலம்புரிதிருச்சங்கு) என்பது பாசுரம். 'நான் உனக்கு ஏதேனும் கைங்கரியம் செய்யாதிருந்தும் ஒருகாரணமும் இல்லாத கருணையால் அடி யேன் மனத்தில் வந்து குடிபுகுந்தாய். அதற்குத் தக்க கைம்மாறு இல்லாவிடினும், எவ்விதத்திலேனும் போலியான ஒரு பிரதி யுபகாரமாவது செய்யக் காண்கின்றிலேன்' என்கின்றார் அய்யங்கார். 'ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந் தாய் உனக்கோர், கைம்மாறு நான் ஒன்றிலேன்; எனதாவியும் உனதே' என்ற திருவாய்மொழியின் கருத்துக் கொண்டது இப்பாசுரம் என்பதையும் சிந்திக்கின்றோம். நாகராசனுக்குத் திருமால் நேர்காட்சி தந்தமையால் 'நாகப்பட்டணம்’ என்று இத்திருத்தலம் திருநாமம் பெற்றது என்ற செய்தியை அறிந்த வண்ணம் நாம் தங்கியிருக்கும் திருவாரூரிலுள்ள விடுதிக்குத் திரும்புகின்றோம். 12. திருவாய் - 5.7:10.