பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. நாங்கூர்க் குடமாடும்கூத்தன் திருவாய்மொழியில் துவயத்தின் பொருள் சொல்லப்படுகின்றதாக ஆசார்யர்கள் காட்டுவர். துவயம் என்பதற்கு இரண்டு என்பது பொருள். மூன்று மந்திரங்களுள் துவயம் இரண்டாவது மந்திரமாகும். இது மந்திர இரத்தினம் என்றும் வழங்கப்பெறும். இதில் இரண்டு வாக்கியங்கள் அடங்கியுள்ளன, அவை, யூரீமத் நாராயண சரணெள சரணம் பிரபத்யே; யூரீமதே நாராயணாய நம என்பவையாகும். இந்த இரண்டு வாக்கியங்களும் பத்துப் பொருள்களைச் சொல்லுகின்றன. திருவாய்மொழியிலுள்ள பத்துப் பத்துக்களாலும் இந்தப் பத்துப் பொருள்களையும் அடைவே காட்டுவர் நம் பூர்வாசார்யர்கள். இவற்றை எடுத்துக்காட்டுவோம். 1. ரீமத் திருமகள் கேள்வனாக இருக்கும் தன்மை. திருவாய்மொழியின் முதல் பத்து இதனைக் கூறுகின்றது. 'மலர்மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள் (1-3:1) என்றும், 'மலராள் மைந்தன் (1.5:9) என்றும், திருமகளார் தனிக்கேள்வன் (1-6:9) என்றும், திருவின் மணாளன் (1.9:1) என்றும், "பூமகளார்த தனிக் கேள்வன் (2-1:7) என்றும், மைந்தனை மலராள் மணவாளனை (1-10:4) என்றும் திருமகள் கேள்வனாதல் காட்டப் பெறுகின்றது. ரீ புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரோடு; மத் - நித்திய யோக முடைய. 2. நாராயண : சித்து, அசித்து என்ற இரண்டு தத்துவங்களை உடலாகக் கொண்டு வாத்சல்யம், சுவாமித்துவம், செளசீலயம், செளலப்பியம், ஞானம், சக்தி, பிராப்தி, பூர்த்திகளாகின்ற கல்யாண 1. ஆசா. ஹிரு. 210