பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii கட்டுரைகளில் ஆழ்வார் பெருமக்களின் பக்தியுணர்ச்சியின் கொடுமுடிகளைக் காணலாம். பாசுரங்களின் சொல்வளம் வியாக்கியாதாக்கள் பாசுரங்களில் ஆழங்கால்பட்ட பாங்கு, என் சிறிய உள்ளம் பாசுரங்களை அநுபவித்த முறை ஆகியவற்றைக் கண்டு மகிழலாம். ஒரு சமயம் இந்நூல்கள் வெளிவரும் பேறு கிட்டுமோ என்ற ஐயமும் அச்சமும் அடியேன்பால் எழுந்தன. இந்நிலையில் 6J(Լք மலையான் திருவருள் பாலித்தான். திருமலை - திருப்பதி தேவஸ்தானம் சமய நூல்களை வெளியிடும் திட்டத்தின் கீழ் நிதி உதவியது- ஆகவே, இந்நூல் தமிழ்கூறு நல்லுலகில் உலா வர வாய்ப்பு கிட்டியது. இங்ங்னமே திருவேங்கட முடையான திருவருளால் சில நோக்கில் நாலாயிரம். Collected Papers of Prof. Dr. N. Subbu Reddiar, (poolos) arcarp espairspy நூல்களும் வெளிவரும் என்ற நம்பிக்கை என்றும் அடியேன்பால் உண்டு. நிதி உதவிய தேவஸ்தானத்தாருக்கு அடியேன் அன்பு கலந்த நன்றியைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன். இந்நூலிலுள்ள முதற்கட்டுரை தில்லை மூலட்டான ஈசுவரர் கோயில் குடமுழுக்கு விழா மலரில் (1979) வெளிவந்தது. ஏனைய கட்டுரைகள் இந்நூலுக்கென்றே எழுதப் பெற்றவை. 12 ஆண்டுகட்கு முன்னர் ஏற்பட்ட அநுபவத்தை மீண்டும் அசைபோடும்போது எல்லையற்ற பேரின்பத்தை அடைகின்றேன். பகவததுபவம் சீவன் முக்தர்கட்கு கிடைத்தற்கரிய பேறு. இந்நூலையும் இந்த வரிசை நூல்களையும் படிப்போர் இந்த அநுபவத்தைப் பெற்றால் அதுவே அடியேன் பெற்ற பேறு. இந்நூலை அழகுற அச்சிட்டு உதவிய நாவல் ஆர்ட் பிரிண்டர்சின் அதிபர் கவிஞர் நாரா. நாச்சியப்பன் அவர்கட்கும், மேலுறையைக் கண்கவர் வனப்புடனும் பக்தியுடனும் அச்சிட்டுக் கட்டமைத்துத் தந்த கந்தன் அடிமை எஸ்.பி. சண்முகம் பிள்ளை gsuffs Gub (z. rfaoudurrstrf Ganesh Printing and Binding) அடியேன் நன்றி கலந்த வணக்கத்தைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன். சென்னை உயர்நீதி மன்றத்து மாண்புமிகு தலைமை நீதிபதி திரு. கோகுலகிருஷ்ணன் அவர்கள் தமிழக மக்கள் உள்ளத்தில் நிலையாக வீற்றிருக்கும் உயர்குணச் செம்மல். பண்புடையார் பட்டுண்டு உலகம் என்ற வள்ளுவர் வாய்மொழிக்கு