பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள் } 49 பொருளாகக் கொள்வதனால் நான் ஈடேறும் வகை எளிதில் அமைந்திருக்கின்றது. அதனை விட்டு கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணேயுள' என்றவாறு சிற்றின்ப விருப்பத்தால் பஞ்சேந்திரியங்கட்கு வசப்பட்டு நாசமடையலாமோ? நான் அவ்வாறு வசப்பட்டு அழியாதவாறு பாதுகாப்பது உனது கடமை என்று வேண்டுகின்றார் அய்யங்கார். இவ்விடத்தில் "உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்' என்றவற்றால் தாரக போஷக போக்கியாதிகளெல்லாம் அவ்வெம்பெருமானே என்று நம்மாழ்வார் கூறியுள்ளமை சிந்திக்கத்தக்கது. இந்த உணர்வுடன் மன நிறைவு பெற்றுத் திருமணிக் கூடத்தை நோக்கி விரைகின்றோம். 10. குறள். 1101 11. திருவாய். 6,71