பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைச்சங்க நாண்மதியப் பெருமாள் 3 | (வேலி . வேலியாகவுடைய முற்றிய - முற்று உணர்ந்த நலம்புரி . நன்மையை விரும்பிய கொள்கை - கோட்பாடு; மலை . பொதியமலை, கொள்கையிற் படிந்து . முறைப்படி நீராடி, தமர்முதல் . கிளைஞர் இருக்கும் இடம்; பெயர்வோன் - மீண்டு வருவோன்.) என்ற அடிகளிலிருந்து இவ்வூரின் பெயர் 'தலைச் செங்கானம்' என்று மிகப் பழங்காலத்தில் வழங்கி வந்ததாகத் தெரிகின்றது. இவ்வூர்க் குடிமகனான மாடலன் என்னும் மறையோன் அகத்திய முனிவனின் பொதிய மலையை வலங் கொண்டு குமரியாற்றில் முறைப்படி தீர்த்தமாடித் தன் கிளைஞர் உள்ள இடமாகிய தலைச்செங்கானத்திற்கு மீண்டு வரும் செய்தி இதில் குறிப்பிடப் பெற்றுள்ளது. இத்தலைச்செங்கானமும் தலைச்சங்காடும் வேறு வேறு ஊர்கள் அன்று என்பதைச் சிலப்பதிகார அடிக்குறிப்பினால் அறியலாம். எனவே, சிலப்பதிகார காலத்திற்கு முன்பிருந்தே இத்திருத்தலம் இலக்கிய வழக்கும் பெற்றுள்ளமை நன்கு புலனாகின்றது. "நாண்மதியப் பெருமாள் இடம் கொண்டுள்ள திருக் கோயில் ஊரின் மேற்குத் திசையில் உள்ளது. திருமங்கை யாழ்வாரும் "தண்ணார் தாமரைசூழ் தலைச் சங்கம் மேல் திசையுள், விண்ணோர் நாள்மதியை” என்று இத்திருக்கோயி லிருக்கும் திசையைக் காட்டுவர். நாள் மதியம் என்ற இரண்டு சொற்கள் சேரும்போது (நாள்மதியம்) நாண்மதியம் என்றாகின்றது. முழுமதியம் அல்லது பூர்ண சந்திரன் என்பது இதன் பொருளாகும். நம்மாழ்வாரும் மகள் பாசுரமாகச் செல்லும், “நைவாய எம்மேபோல் நாள்மதியே! நீஇந்நாள் ஊகஇருளகற்றாய் மாழாந்து தேம்புதியால்" (நைவாய - நைந்து போதலையே இயல்பாக உடைய, எம்மே போல் . எம்மைப் போலவே நாள் மதியே - பூர்ண சந்திரனே, மைவான் . கரிய ஆகாயம்; மாழாந்து - மயங்கி; தேம்புதி - குறைபடுகின்றாய்) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தில் “நாள்மதியே” என்று பூர்ண சந்திரனை விளிப்பதைக் காணலாம் எம்பெருமானைச் சூரியனுடனும் சந்திரனுடனும் சம்பந்தப்படுத்தி முன்னோர் போற்றியுள்ளதைப் பக்தி இலக்கியங்களில் கண்டு களிக்கலாம். நம்மாழ்வாரும், "குழுமித் தேவர்குழாங்கள் கைதொழச் சோதிவெள்ளத்தி னுள்ளே எழுவதோர் உருஎன்நெஞ் சுள்எழும் ஆர்க்கும் அறிவரிதே' 6. பெரி. திரு. 7.9.9 7. திருவாய் 2-1:6 8. திருவாய் 5-5:10