பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி இந்தத் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டிருக்கும் எம்பெருமானின் இணையடிகளன்றி வேறொன்றையும் அறியாதவர் திருமங்கையாழ்வார், "பறையும்வினை தொழுதுய்ம்மின்நீர் பணியும்.சிறு தொண்டிர் புலியூர்ச்சல சயனத்து உறையும்இறை அடியல்லது ஒன்றிறையும் அறியேனே.” (பறையும் . தொலைந்துபோம்; வினை . வாங்கள்; சிறுதொண்டிர் . கீழானவற்றில் தொண்டு பட்டுத் திரிகின்றவர்கள்; ஒன்று . வேறொன்று; இறையும் . சிறிதும்) இவ்வாறு தகுதியற்றவர்களைப் பணிந்து திரிகின்றவர்களை நோக்கி, “சிறுபுலியூர்ச் சலசயனத்தைத்தொழுது உய்வீர்களாக, அப்படித் தொழுதால் நும் பாவங்கள் யாவும் தொலைந்து போம்” என்று ஆற்றுப்படுத்துகின்றார் ஆழ்வார். "இங்குப் பொருந்தி வாழ்கின்ற பெருமானுடைய இணையடிகளன்றி வேறொன்றையும் அறியேன்” என்று தனது பற்றுறுதியையும் வெளியிடுகின்றார். மேலும், “சலசயனத்து ஆன்ஆயனது அடியல்லது ஒன்று அறியேன் அடியேனே' என்றும் கூறுவர். கிருஷ்ணாவதாரத்து எம்பெருமானே இங்கும் எழுந்தருளியுள்ளான் என்பது ஆழ்வாரின் நம்பிக்கை. “கிருஷ்ணாவதாரம் தீர்த்தம் ப்ரஸ்ாதித்ததென்று வெறுக்க வேண்டாதபடி பிற்பாடர்க்கும் அநுபவிக்கலாம்படி அவ்வதாரத்தின்படியே வந்து சாய்ந்தவன்” என்பது பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியானம். “சிறுபுலியூர் என்ற திருத்தலமும் வேண்டா, அங்குள்ள சலசயனத் திருக்கோயிலும் வேண்டா, அங்குள்ள திருக்கோயிலும் வேண்டா, அங்குக் கோயில் கொண்டிருக்கும் எம்பெருமானும் வேண்டா; அத்திருக்கோயிலைத் தொழுவதையே இயல்பாகவுடைய பாகவதோத்தமர்களின் திருவடிகளே சரணம் என்று இருப்பார்க்குத் துயரெல்லாம் தொலைந்திடும்” என்கின்றார் ஆழ்வார். “சலசயனம் தொழுநீர்மையுடையார் அடிதொழுவார் துயர் இலரே” என்பது திருமங்கைாழ்வாரின் திருவாக்கு. “தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்" என்ற நம்மாழ்வாரின் திருவாக்கும் ஈண்டு ஒருங்கு வைத்து எண்ணிப் போற்றத்தக்கது. பாகவதர் வழிபாடு பகவான் வழிபாட்டை விடச் சிறந்தது என்பது வைணவ சமயத்தின் தலையாய கோட்பாடு. 12. மேலது 7-9:4 13. மேலது. 7-9:6 14. திருவாய் 7-1:11