பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி மாதர்களின் கண்ணழகில் ஈடுபட்டு அழிந்து போகாமல் எம்பெருமான் திறத்தில் ஈடுபட்டு உய்வு பெற வேண்டி சிறுபுலியூர்ச் சலசயனத்து எம்பெருமானைத் தொழுகின்றதாகக் கூறுகின்றார். தம்மை அலட்சியம் செய்யாமல் அருள்புரியுமாறு வேண்டுகின்றார் ஆழ்வார். 4. “மையார்வரி நீலம்மலர்க் கண்ணார்மனம் விட்டிட்டு உய்வான்உன கழலேதொழு தெழுவேன்... ... புலியூர்ச்சல சயனத்து ஐவாய் அரவணைமேல்உறை அமலாஅரு ளாயே" (மையார் - மை அணிந்த வரி தோகை, நீலம் மலர் - கருநெய்தற் பூ மணம் - மனத்தை உய்வான் - உய்யும் பொருட்டு, அருளாய் - கிருபை காட்டுவாய்.) என்பது அவர்தம் திருவாக்கு. இந்த வாக்கைக்கொண்டே நாமும் அவனை வேண்டுகின்றோம். பெரிய பிராட்டியார் மார்பில் உறையும் எம்பெருமானிடம் ஆழ்வார் சரண்புகுகின்றார். “கருமாமுகி: லுருவா கனல் உருவா! புனல் உருவா! பெருமால்வரை உருவா! பிற உருவா! நின துருவா திருமாமகள் மருவும்.சிறு புலியூர்ச்சல சயனத்து அருமாகடல் அமுதே! உனது அடியேசரண் ஆமே" (மா - பெரிய முகில் - மேகம், உருவா . உருவமுடையவனே கனல் - நெருப்பு புனல் - நீர் மால்வரை , பெரிய மலை; நினது . உன்னுடைய திருமாமகள் - பெரிய பிராட்டியார்) என்பது ஆழ்வார் பாசுரம். இத்திருப்பாசுரத்தின் இனிமை கனிந்த நெஞ்சினரால் நன்கு அநுபவிக்கத்தக்கது. ஆழ்வார் தமது உள்ளன்பு நன்கு விளங்க எம்பெருமானை வாயார விளிக்கின்றார். இறுதியில் "உன் திருவடிகளே சரணம்” என்று கூறி அவன் திருவடிகளில் சரண் புகுகின்றார். நாமும் ஆழ்வாரின் அடியொட்டிச் சரண் புகுகின்றோம். பாசுரத்தை மிடற்றொலி கொண்டு ஒதி உளங்கரைகின்றோம். “ஆமருவ மேய்த்த அரங்கர்எதிர் ஆர்நிற்பார் தாமருவி வாணனைத்தோள் சாய்த்தநாள் - சேம முறுபுலியூர் வன்றோல் உடையான் உடைந்தான் சிறுபுலியூர் எந்தைமேற் சென்று" (ஆ-பசு மருவி - விருப்பி; எதிர் - முன்பாக; வாணன் . பானாசுரன், மருவி . கிட்டி, சாய்த்த - அறுத்துத் தள்ளிய நாள் - காலத்தில், சேமம் , காவல்; புலிஊர்வல்தோல் உடையான் - வலிய புலத்தோலை ஆடையாகவுடைய சிவன்; மேல்சென்று - எதிர்த்துச் சென்று; உடைந்தான் - தோற்று ஓடினான்) 16. பெரி. திரு. 7-9:8 17. பெரி. திரு. 7-9:9 18. நூற். திரு. அந் - 11