பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி தன் உடைமையைப் பெறுகைக்குத் தான் இரப்பாளானாய் அவதரித்த படியன்றோ வாமனாவதாரம். இதனால் சேதநன் லாபம் ஈசுவரனுக்குப் புருஷார்த்தமேயன்றி ஈசுவர லாபம் சேதநனுக்குப் புருஷார்த்தமன்று என்று சத் சம்பிரதாயப் பொருளையும் விளக்கி வைக்கின்றார். நாம் வரும் குதிரை வண்டியை விட்டிறங்கித் திருக்கோயிலுக்கு வருகின்றோம். திருக்கோயிலும் கோயிலுள்ள ஊரும் இருக்கும் சூழ்நிலையைக் கவனிக்கின்றோம். நம்மாழ்வாரின் மங்களாசாசனப் பாசுரங்கள் நினைவிற்கு வருகின்றன.” “வேலை மோதும் மதிள்சூழ் திருக்கண்ணபுரம்" என்ற அடியைச் சிந்திக்கின்றோம் “சமுத்திரம் அணித்தாகையாலே திரைகள் வந்து மோதா நின்றுள்ள மதிலாலே சூழப்பட்டிருந்துள்ள திருக்கண்புரத்திலே' என்பது ஈடு. இந்நிலை இன்று காண்டற்கில்லை. முற்காலத்தில் இவ்வூருக்கருகில் கடல் இருந்திருத்தல் கூடும் என்றும் நாளடைவில் அது ஒதுங்கிப் போயிருத்தல் கூடும் என்றும் பெரியோர் பணிப்பர். திருமங்கையாழ்வாரும் “கலங்கல் முந்நீர்க் கண்ணபுரம்' என்று பேசுவர். மேலும் இவர், வலம்மனு படைஉடை மணிவளர் நிதிகுவைக் கலம்மனு கண்ணபுரம்." (மனு - பொருந்தியிருக்கப் பெற்ற, கலம் . மரக்கலங்கள்) என்று கூறுவதால் கடல் அருகில் இருந்த கருத்தை அரண் செய்யும். தொலைநாடுகளிலிருந்து சிறந்த சரக்குகளை ஏற்றிக் கொண்டு வருகின்ற கப்பல்கள் கடல்களில் பெரும்பான்மையாகக் காணப்பெறும் என்கின்றார். இன்று சுமார் பத்துக் கிலோமீட்டர் தொலைவில் கடல் உள்ளது. திருக்கண்ணபுரம் ஐந்து கிருஷ்ணன் கோயில்களுள் ஒன்று; மற்றவை திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணன் கவித்தலம், திருக்கோவலூர் என்பவையாகும். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஊர் ஆதலால் நீர் வளம், நிலவளத்திற்குக் குறைவில்லை. இவை பற்றிய ஆழ்வார் பாசுரங்களைச் சிந்திக்கின்றோம். நம்மாழ்வார் “வண்டுபாடும் பொழில்சூழ் திருக்கண்ணபுரம்' என்பதால் சோலைகள் சூழ்ந்த ஊர் என்பது புலனாகின்றது. “செய்யில் வாளை உகழும் திருக்கண்ணபுரம்' என்பதால் கழனிகளில் வாளை மீன்கள் துள்ளி விளையாடப் பெற்ற திருக்கண்ணபுரம் என்பது தெரிகின்றது. 9. திருவாய், 9.10 12. மேலது. 8.7:9 10. திருவாய் 9.10.1 13. திருவாய் 9.10:3 11. பெரி. திரு. 8.82 14. மேலது. 9.10.7