பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணபுரத்துக் கருமணி 53 கொம்பு ஒசித்த புள்பாகன், பவள வாயன் என்று போற்றுகின்றாள் (4); அடித்தலமும் தாமரை, அங்கைகளும் பங்கயம்; முடித்தலமும் பொன் பூணும் என் நெஞ்சைவிட்டு அகலாது; மலரவளோ வரை ஆகத்து இருப்பாள் (5), பேராயிரமுடைய பேராளன்; ஏரார் கன மகர குண்டலநாதன், எண்தோளன்; நீரார் மழைமுகிலே, நீள்வரையே என்று ஒப்பிட்டுப் பேசப் பெறுபவன் (6); அவன் பீதக ஆடையும் அதன்மீது அணிந்துள்ள சிவளிகைக் கச்சின் அழகும் சொல்லுந் தரமன்று அடியிணையும் அங்கைகளும் பங்கயத்திற்கு ஒப்பாகும். திருமேனி பற்றி ஐயத்துடன் பேசுகின்றாள். மைவளர்க்கும் மணியுருவம் மரகதவோ? மழைமுகிலோ?" என்கின்றாள். இராமன் சுமந்திரன் முதலியோரை அயோத்திக்கு அனுப்பிவிட்டு நகர மக்களுக்குத் தெரியாமல் சீதையுடனும் தம்பி இலக்குவனுடனும் புறப்பட்டுச் செல்வதைக் கூறும் கம்பநாடன், மையோ?மர கதமோ, மறி கடலோ?மழை முகிலோ? ஐயோஇவன் வடிவன்ெபதொ ரழியாவழ குடையான்' என்று ஆழ்வார் தாம் திருமேனி அழகினை நினைந்துதான் பாடியிருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகின்றது. "கொற்றப்புள் ஒன்றேறி மன்றுடே வருகின்றான்” எனத் தனக்குக் கருடசேவை தருவதைப் பேசுகின்றாள்; பெண்ணாய்ப் பிறந்தவர்கள் அணைந்து வாழ்வதற்கென்றன்றோ அவன் திருமார்பு படைத்தது? ஒருத்தியைத் (அலர்மேல் மங்கையை) திருமார்பிலேயே வாழ வைத்திருப்பதைப் போலவே, நமக்கும் அத்திருமார்பைப் பெறுவித்தல் பெண்ணாய்ப் பிறந்த நாமும் வாழ்ந்து போக மாட்டோமோ? என்கின்றாள் (8); வண்டுகள் படிந்திருக்கப் பெற்ற திருத்துழாய் மாலை அப்பெருமானின் திருமுடியில் ஏறினதும் அதிகமான நறுமணம் வீசப் பெறுகின்றது என் அன்பு முழுவதும் இவர்பால் குடிபுகுந்துவிட்டது; எனவே, ஒரு நொடிப் பொழுதும் இவரைப் பிரிந்து தரித்திருக்க மாட்டகின்றிலேன், இவரை எங்கோ கண்டதுபோல் தோன்றுகின்றது; எங்கே கண்டோம்? என்கின்றாள் (9). மேலும், திருத்தாயார் பேசுகின்றாள். தெள்ளியீர், திருக்கண்ணபுரம் தொழுதாள்” என்பதை மட்டிலும் வியாஜமாகக் 24. பெரி. திரு. 8.1:7 25. கம்ப. அயோ. கங்கை - 1