பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி (ஞாயிறு உறைவார் - ஞாயிற்றின் கண் உறைபவர்; வணம் . இயல்பு, நிறம், அம்புதனின் மேகத்தின்; மாசுணம் - மலைப்பாம்பு வியாழம் . பாம்பு நகை - புன்முறுவல்; அசனி - வச்சிராயுதம்) பாடலின் ஞாயிறு முதல் சனி ஈறாகவுள்ள ஏழுநாட்களின் பெயர்களும் அமைந்து சொற்சுவை பொருட்சுவை பயப்பதைக் கண்டு மகிழலாம். எம்பெருமானை ஏத்துவோர்க்கு இடம் இல்லை என்ற கருத்தினை உயிர் மெய் வருக்க மோனையாக (க முதல் கெள வரை) அமைந்துள்ள பாடலும் (81) சொல் நயமும் பொருள் நயமும் அமைந்ததே. பன்னிரு திருநாமங்களும் அமைந்த பாடலும் (88) இத்தகையதே. பிறவிப் பிணியைத் துணிக்குமாறு வேண்டும் பாடலில் ஆழ்வார் பாசுரங்களின் சாயை நன்கு படிந்திருத்தலைக் கண்டு மகிழலாம். களங்கனி வண்ணா கண்ணபுரக் கோனே உளங்களி(வு) உள்ளோர் உயிரே - வளங்கொள் மறையோர் வழுத்த மகிழ்ந்துறைவாய் தோன்றற் சிறையே சிதைப்பாய் திறம். (90) முதல் அடியில் “களங்கனி வண்ணா கண்ணனே' என்றதிலும், இரண்டாம் அடியில் “நினைந்து நைந்துள் கரைந்துருகி” என்பதிலும் வளங்கொள் மறையோர் வழுத்த என்பதிலும், "தீயெடுத்து மறைவளர்க்கும்”, “வேதநாவர்” என்பனவுமான சொற்றொடர்களில் ஆழ்வார் பாசுரங்களின் சாயல் படிந்திருத்தலைக் காணலாம். வலம்புரிக்குக் கிடைத்த பேற்றினை எண்ணி ஆண்டாள் களிப்பது போல (நாச். 7) இந்த ஆசிரியரும் வேய்ங்குழலின் சிறப்பை எண்ணி மகிழ்கின்றார் (94), திருச்சங்கு செங்கண்மால் தன்னுடைய வாய்த்தீர்த்தம் பாய்ந்து ஆடி அவனுடைய அங்கைத்தலம் ஏறி அன்னவசம் செய்கின்ற (கண் வளர்கின்ற) நிலையைக் கண்டு களிக்கின்றாள் ஆண்டாள்; தனக்கு அந்த வாய்ப்பு இல்லையே என்று பொறாமையும் படுகின்றாள். அதுபோலவே ஆசிரியரும் கண்ணபுரப் பெம்மான் பங்கயக் கைகொண்டு உயரும் மின்குழல்' என்றுரைத்து அவன் வாயமுதம் மாந்தி மகிழ்வதைக் கண்டு தானும் மகிழ்கின்றார். இந்தப் பாடல் கண்ணன் கன்றுகளை மேய்த்துத் திரும்பும் கோலத்தைக் காட்டும் பெரியாழ்வாரின் பாசுரங்களையும் (பெரியாழ். திரு. 3.4) அவன் குழல் ஓசையில் மயங்கி நிற்கும் மான் - கணங்கள், பறவையின் கணங்கள், மரங்கள் இவற்றின் நிலையைக் காட்டும் இந்த ஆழ்வாரின் பாசுரங்களையும்