பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி அழுந்துார் நின்ற அஞ்சனக் குன்றம் 69 உற்சவரை விட மூலவர் மிக்க அழகு வாய்ந்தவர். சுமார் பத்து அடி உயரம் உள்ளவர். வாட்ட சாட்டமான திருமேனி, கரிய திருமேனியராக அமைந்த நல்ல சிலை வடிவம். தலையில் தங்கத்தாலான கிரீடம். இடையிலே தசாவதார உதரபந்தம்'. திருக்கழுத்திலே சகஸ்ரநாம மாலை திகழ்கின்றது. திருத்தோள்களை வாகுவலயங்கள் அணிசெய்கின்றன. 'அகலகில்லேன் இறையும்' என்று அலர்மேல் மங்கை உறை மார்பர். நெற்றியிலே வயிரத் திருநாமம். எல்லாவற்றையும் விட சாந்தம் நிலவும் திருமுக மண்டலம். இந்த எம்பெருமானைச் சேவித்த ஆழ்வார், திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக் கரசே செய்யகண்ணா உருவச் செஞ்சுடர் ஆழிவல்லானே! உலகுஉண்ட ஒருவா! திருமார்பா' (திரு - பெரிய பிராட்டியார்; திருஆகிய - இலக்குமிகரணான, ஆழி - சக்கரம்; ஒருவா . ஒப்பற்றவனே; திருமார்பா - பிராட்டியைத் திரு மார்பிலுள்ளவனே) என்று இந்த எம்பெருமானின் பெருமைகளைச் சொல்லி ஏத்துகின்றார். தேன்.அமரும் பொழில்தழுவும் எழில்கொள் வீதி செழுமாட மாளிகைகள் கூடம் தோறும் ஆனசொல்சீர் மறையாளர் பயிலும் செல்வத்து அணிஅழுந்துர் நின்றுகந்த அமரர் கோவே." (தேன்.அமரும் - தேன் பொருந்தியுள்ள பொழில் - சோலை; எழில் - அழகு; மாடம் - மாடி, மாளிகைகள் - வீடுகள்; கூடம் - வேறு இடங்கள்; பயிலும் - வாழும்.) என்று போற்றிப் பரவுகின்றார். இவரை நாம் மனமாரச் சேவித்து தாயார் சந்நிதிக்கு வருகின்றோம். தாயார், செங்கமலவல்லி. இவரையும் சேவித்து இவரது திருவருளுக்குப் பாத்திரர்களாகின்றோம். திருமங்கையாழ்வார் ஆமருவியப்பனை மங்களாசாசனம் செய்யும்போது பரத்துவம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை நிலையிலுள்ள எம்பெருமான்களையும் அநுபவித்து இனியராகின்றார். “பரனே... மாதவனே, மதுசூதா” (3-74) என்றும், “வெள்ளத்துள் ஓர் ஆலிலை மேல் மேவி (7.54) என்றும், “உலகுண்ட ஒருவா” (7-7-1) என்றும் பரத்துவநிலை எம்பெருமானைப் பரவுகின்றார். “ஒலிநீர் உலகங்கள் படைத்தானை' (7.6.3) என்று வியூக எம்பெருமானைச் சிந்திக்கின்றார். 13. பெரி. திரு. 7.7:1 14. பெரி. திரு. 7.86