பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளக்குளத்து அண்ணன் 75 பெருக்காறு போலேயாயிற்று விபவம். பூமியில் அவதரித்துச் சஞ்சரித்தும் அக்காலத்தில் வாழ்ந்தவர்கட்கு அடையத்தக்கதாய்ப் பிற்காலத்தில் உள்ள இவனுக்குக் கிட்டாதபடியாக இருக்கும் இந்நிலை. மேற்கூறியவை போலன்றி அவனுக்கு விடாய் தீரப் பருகலாம்படி பெருக்காற்றில் தேங்கின மடுக்கள் போலே ஆயிற்று அர்ச்சாவதாரம்; காண்பதற்குத் தேசத்தாலும் காலத்தாலும் கரணத்தாலும் சேயதன்றித் திருக்கோயில்களிலும் இல்லங்களிலும் என்றும் ஒக்க எல்லார்க்கும் கண்ணுக்கு இலக்காம்படி நிற்கின்ற “பின்னானார் வணங்கும் சோதி” யானது அர்ச்சாவதார நிலை. இந்தக் கருத்துகள் நம் மனத்தில் குமிழியிட்ட வண்ணம் மயிலாடுதுறை காளியாக்குடி விடுதியிலிருந்து திருநாங்கூர்த் திருப்பதிகளைச் சேவிப்பதற்காகப் பேருந்தில் புறப்படுகின்றோம். மயிலாடுதுறையிலிருந்து சீகாழிக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் சீகாழியை அடைவதற்குச் சுமார் மூன்று கிலோ மீட்டர் முன்னதாகவே ஒரு கிளை சாலை (மண் சாலை) செல்லுகின்றது. அங்கு திருநாங்கூர், அண்ணன் கோயில் என்ற பெயர்களிட்ட கைகாட்டிப் பலகைகள் தென்படுகின்றன. இந்த இடத்தில் இறங்கி ஒரு மாட்டுவண்டியை வாடகைக்கு அமர்த்துகின்றோம். சாதாரணமாக இவ்விடத்தில் ஓரிரண்டு மாட்டு வண்டிகள் இதற்கெனவே நிறுத்தி வைத்திருப்பதைக் காணலாம். இந்த வண்டியைக் கொண்டே திருவெள்ளக்குளம் (திருநாங்கூர்த் திருப்பதிகளில் 10 வது) மணிமாடக் கோயில் (1 வது), வைகுந்த விண்ணகரம் (2 ஆவது), அரிமேய விண்ணகரம் (3 வது) வண்புருடோத்தமம் (5 வது), செம்பொன்செய் கோயில் (6 வது) திருத்தெற்றியம்பலம் (7 வது) ஆகிய ஏழு திவ்விய தேசங்களையும் சேவிக்கத் திட்டமிடுகின்றோம். முதன்முதலாக வழியில் தென்படுவது திருவெள்ளக்குளம் என்னும் திருத்தலமாகும்; நெடுஞ்சாலையிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. அண்ணன் கோயில் என்ற திருநாமமே எங்கணும் பெருவழக்காக உள்ளது. இத்திருத்தலத்துத் தீர்த்தம் திருவெள்ளக்குளம் என்பது புஷ்கரிணியின் திருநாமமே திவ்விய தேசத்திற்கும் வழங்கலாயிற்று என்பது கருதத்தக்கது. இத்திருத்தலத்து எம்பெருமானைத் திருமங்கையாழ்வார் மட்டிலுமே ஒரு திருமொழியால் (47) மங்களா சாசனம் செய்துள்ளார். முதற் பாசுரத்திலேயே திருவெள்ளக் குளத்து அண்ணா! என்று எம்பெருமானை விளிப்பதால் எம்பெருமான் அண்ணன் ஆகின்றார்; 5. திருநெடுந். 10