பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளக்குளத்து அண்ணன் 77 இச்செய்திகளைச் சிந்தித்த வண்ணம் இத்திருத்தலத்தை அடைகின்றோம். இது திருநாங்கூர்த் திருப்பதிகளில் பத்தாவது ஆகும். இஃது ஒரு சிற்றுரே. இங்கு உணவு விடுதிகளும் இல்லை; இது திருத்தேவனார்த் தொகைக்கு மேல்திசையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சீகாழி இருப்பூர்தி நிலையத்திலிருந்து தென்கிழக்கில் சுமார் பத்துக் கிலோமீட்டர் தொலைவிலும், வைத்தீஸ்வரன் கோயில் இருப்பூர்தி நிலையத் திலிருந்து கீழ்த்திசையில் சுமார் பத்துக் கிலோமீட்டர் தொலை விலும் உள்ளது. திருத்தேவனார்த் தொகையைச் சேவித்தவுடன் இங்கு வந்திருக்கலாம். காலதாமதம் ஆகும் என்று வரவில்லை. ஊரின் சூழ்நிலை நம் கண்வட்டத்தில் படுகின்றது. சிறிது சோலை சூழ்ந்த ஊரே, ஆழ்வாரும், “தேனார் பொழில்சூழ் திருவெள்ளக்குளம்" (தேன்.ஆர் . தேன் நிறைந்த) சேடார் பொழில்சூழ் திருவெள்ளக்குளம்' (சேடுஆர் - திரண்டு இருக்கும்.) சேலார் வயல்சூழ் திருவெள்ளக்குளம்" (சேல்.ஆர் . மீன்கள் நிறைந்த) சீரார் பொழில்சூழ் திருவெள்ளக்குளம்" (சீர்ஆர் - சிறந்த பொழில் - சோலை) என்றெல்லாம் ஊரைச் சுற்றியுள்ள சோலைகளையும் வயல்களையும் குறிப்பிடுகின்றார். வடநாட்டுத் திருப்பதிகளில் திருவேங்கடத்திற்கு எவ்வளவு சிறப்புண்டோ அவ்வளவு சோழநாட்டுத் திருப்பதிகளில் இத்திருவெள்ளக் குளத்திற்கு உண்டு என்பது அறிய வேண்டியது ஒன்று. அங்கும் இங்கும் வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும். இந்த ஒற்றுமை நயம் விளங்கவே, வேடார் திருவேங்கடம் மேய விளக்கே" (வேடுஆர் - வேடர்கள் மலிந்திருக்கும்) என்று வேற்றுமையின்றி எம்பெருமானை விளிக்கின்றார். திருவேங்கடம் பற்றிய திருமொழிகளில் 'கண்ணார் கடல் சூழ்" என்பது ஒரு திருமொழி. அதன் சாயையாகவே இத்திருமொழியும் அருளிச் செய்யப்படுகின்றது. இரண்டு திருமொழிகளின் தொடக்கமும் ஒருவிதமாகவே இருக்கும்படி அமைய வைத்ததும் உய்த்துணரத்தக்கது. திருவேங்கடம் பற்றிய திருமொழி கண்ணார் 6. பெரி. திரு. 4.7:4 9. மேலது 4.7:8 7. பெரி. திரு. 4.7:5 10. மேலது 4.7:5 8. மேலது 4.7:7 11. மேலது 11.0