பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அமராபரணன் சீயகங்கன்[1]

கங்கர்கள்

இந்நாளைய மைசூர்ப் பகுதியை ஆண்ட முன்நாளைய குறுநில மன்னர்கள் கங்கர்கள் என்று கூறப்பெறுவர். அன்னோர் கி. பி. மூன்று நான்காம் நூற்றாண்டு முதற் கொண்டு வரலாற்றில் குறிக்கப் பெறுகிறார்கள். பல்லவர் ஆட்சிக் காலத்தில் ஒரு சமயத்தில் பல்லவர் பக்கமுமாக இருந்தவர்கள். பெரும்பாலும் இவர்கள் மேலைச்சளுக்கியர்களுக்கு அடங்கியவர்களாகக் காணப்படுகின்றனர். சோழவரசர்கள் உயர் நிலையில் இருந்தபொழுது சோழர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாகவே இவர்கள் தோன்றுகின்றனர். சீயகங்கன் என்ற பெயருடையான் முதற் குலோத்துங்கன் காலத்தில் ஒருவன் இருந்தான்; இரண்டாம் குலோத்துங்கன் காலத்திலும் ஒருவன் இருந்தான் ; இவ்விருவரும் சிவபக்தர்களாகவே திகழ்ந்தனர்.

அமராபரணன் சீயகங்கன்

மேற்குறித்த இரு சீயகங்கரின் வழி வந்தவனும், கங்கமரபைச் சேர்ந்தவனும், மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் அவனுக் கடங்கிய குறுநில மன்னனாக விளங்கியவனு மாகியவனே அமராபரணன் சீயகங்கன். இற்றை நாளில் ’கோலார்’ என்று கூறப்படும் குவளாலபுரம் இவனுடைய தலைநகரமாகும். வடார்க்காடு மாவட்டம் திருவல்லத்தில் காணப்படும் கல்வெட்டில்:

“ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு முப்பத்து நாலாவது அமராபரணன் சீயகங்கன்


  1. இது ஞானசம்பந்தத்தில் வெளிவந்தது.