பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

சோழர் சரித்திரம்

________________

முசுகுந்தன் 19 திருவாய்மூர் என்னும் ஏழு திருப்பதிகளிலும் முறையே ஒரோ வொன்றாகப் பிரதிட்டை செய்தனன். இங்கனம் ஏழு தியாகராச மூர்த்திகளும் எழுந்தருளப் பெற்ற இவ்வேழு திருப்பதிகளும் சத்த விடங்கத்தலம் என்று கூறப்படும். இதனை, சீரார் திருவாரூர் தென்னாகை நள்ளாறு காரார் மறைக்காடு காறாயல் - பேரான ஒத்ததிரு வாய்மூர் உவந்த திருக் கோளிலி சத்த விடங்கத் தலம் என்னும் வெண்பாவானறிக..

  • இங்கே கூறிய வரலாறுகளைப் பின்வரும் பாடல்கள் சுருக்க மாக உணர்த்துவன : " மிக்க வின்னது நின்றிட முன்னம்

வெள்ளி விண்டுவில் விண்டொடு காவில் இக்கு வேளை யெரித்த நுதற்கண் -எம்பி ரானுமை யோடு மிருப்ப அக்கணத்தின் முசுக்கலை யொன் றங் காதி மீதினும் ஆரியை மீதும் தக்க வில்லுவ நல்லிலை சிந்தத் தையல் சீறலும் ஐயன் விலக்கி. “கூவிளத்தழை கொண்டெமை யிங்கன் கோதில் பூசை குயிற்றிய பண்பால் நீவ ளைந்திட வேலை சுலாவும் நீள்பு விக்கா சாகுதி யென்றே மாவளைக்கை யிடத்த னிசைப்ப வைய கத்திடை வந்து பிறந்தே காவளைத்த வயக்கரு வூர்வாழ் காமர் சேர்முசு குந்த னிடத்தின்.