பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

சோழர் சரித்திரம்

________________

72 சோழர் சரித்திரம் தூய்மையையும் நன்கு புலப்படுத்துகின்றன. மற்றொரு செய் யுள் ' தம் குடியின் முதியோர்களைக் கூற்றம் கொண்டுபோக, ஊழினாலே தம்பால் வந்த, முன்னோரின் வெற்றியா லுண் டாகிய அரசுரிமையைப் பெற்றேமாயின் இத்தலைமையைப் பெற்றேமெனக் கொண்டு தம் குடிமக்களை இறைவேண்டி யிரக்கும் ஆண்மையில்லாத உள்ளஞ்சிறியோன் பெறின், அவ்வரசுரிமை அவனுக்குத் தாங்க வொண்ணாதாம்படி மிக வும் கனத்தது ; மனவெழுச்சியும் முயற்சியுமுடைய சீரி யோன் பெறுவனாயின், வெண்குடையும் முரசுமுடைய அர சாட்சியைப் பொருந்திய செல்வம் தாழ்ந்த நீரையுடைய வற்றிய குளத்திடத்துச் சிறிய நெட்டியின் உலர்ந்த சுள்ளி போலப் பெரிதும் நொய்தாகும்' என்னும் பொருளுடையது. இதிலிருந்து அவனுடைய உள்ளமிகுதியும், குடிகளைப் புரக் குங் கொள்கையும் நன்கு வெளிப்படுகின்றன. இவ்வரசனைப் பாடிய புலவர்கள் உறையூர் முதுகண்ண ன் சாத்தனார், கோவூர்கிழார், ஆலத்தூர்கிழார் என்போர். இவ ருள், இவன் துஞ்சியபின் இருந்து இரங்கிப் பாடியவர் ஆலத்தூர் கிழார். கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மது ரைக்குமான் என்னும் புலவராற் பாடப்பட்ட இலவந்திப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளிசேட்சென்னி யென்பான் இம் மன்னனேயாயின் இவன் இலவந்திப்பள்ளி என்னுமிடத்தில் உயிர் துறந்தானாவன். மதுரைக் குமரனாரும் இவனைப் பாடினா ராவர். 12. தித்தன் இவ்வாசன் உறையூரிலிருந்தவன். இவன் மகன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி என்பான். " இழையணி பணைத்தோள் ஐயை தந்தை மழைவளந் தரூஉ மாவண் டித்தன் 19