பக்கம்:சோழர் வரலாறு.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

249



வீராவேசத்துடன் போர் செய்து, பகைவர் சேனையை அழித்து ஆட்களையும் பொருள்களையும் கவர்ந்து, அவ்விடத்திற்றானே முடி சூடிக் கொண்டான் என்பது முன்னரே கூறப்பட்டதன்றோ?

ஈழப்போர் : கி.பி. 1055-ல் வெளியான இராசேந்திரன் கல்வெட்டுகள்[1] ‘இராசேந்திரன் ஈழத்திற்குப் பெரும் படை ஒன்றை அனுப்பினான். அப்படை வீரசலாமேகனை வென்று, ஈழத் தரசனான மானாபரணனுடைய புதல்வர் இருவரைச் சிறைப்படுத்தியது’ என்று கூறுகின்றன. ஈழ நாடு இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்பதற்குச் ‘சங்கிலி கனதராவ’ என்னும் இடத்திற்கிடைத்த இராசேந்திரன் கல்வெட்டே சான்று பகரும்[2]. இலங்கையிற் கிடைத்த சோழர் காசுகளில் இராசாதிராசன், இராசேந்திர தேவன் இவர் தம் காசுகள் கிடைத்துள்ளன[3]. இவற்றால் ஈழநாட்டின் பெரும்பகுதி சோழப் பேரரசிற்கு உட்பட்டிருந்ததென்பது வெள்ளிடைமலை. ரோஹனம் என்னும் தென்கோடி மாகாணமே தனித்திருந்தது.

‘கித்தி’ என்பவன் கி.பி.1058-இல் ‘விசயபாகு என்னும் பெயருடன் ரோஹண மாகாணத்தரசனாகிச் சோழருடன் போரைத் தொடங்கினான். இராசேந்திர தேவன் காலத்தில் அவன் முயற்சி பயன்பெறாது போயிற்று[4].


  1. S.I.I. Vol. 3, No. 29.
  2. 612 of 1912.
  3. Codrington’s ‘Ceylon coins’, pp.84 85.
  4. Maha Vamsa, chapter 57, S. 65-70.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/251&oldid=1233579" இலிருந்து மீள்விக்கப்பட்டது