பக்கம்:சோழர் வரலாறு.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

273



என்பதை நன்குணர்ந்தவன்; ஆதலின் முதலில் ஒவ் வொருவரும் அரசர்க்கு ஆண்டுதோறும் செலுத்திவந்த சங்கம் நீக்கினான். இச்சுங்கம் ஏற்றுமதிப் பொருள்கட்கு இடப்படும் தீர்வையாகும். இச் செயலால் மக்கள் இவனைச் ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ எனப் பாராட்டினர்; ‘தவிராத சுங்கம் தவிர்த்தோன்’ எனப் பரணி பாடிய சயங்கொண்டார் இவனை வாயாரப் புகழ்ந்தனர். இச்சுங்கம் தவிர்த்தமை சோழநாட்டளவே இருந்தது போலும்! கி.பி.194-இல் வெளிப்பட்ட கல்வெட்டு ஒன்று, ‘சோழ நாட்டில் சுங்கம் வசூலிப்பதில்லை’ என்பதைக் சுட்டுகிறது[1]. தஞ்சாவூரைச் சேர்ந்த கருந்திட்டைக் குடி ‘சுங்கம் தவிர்த்த சோழநல்லூர்’ எனப் பெயர் பெற்றது[2]

குலோத்துங்கன் தன் 17-ஆம் ஆட்சி ஆண்டிலும் 40-ஆம் ஆட்சி ஆண்டிலும் நிலத்தை அளக்குமாறு கட்டளையிட்டான் அளந்து முடிந்த பிறகு குடிகளிடம் ஆறில் ஒரு கடமை வாங்கினான். குலோத்துங்கன் ஆட்சியில் வரி விதிக்கப்படாமல் ஒதுக்கப்பட்ட நிலங்களும் உண்டு. இவையே இவனது ஆட்சியின் சிறந்த செயல்கள். ஏனையவை ‘சோழர் அரசியல்’ என்னும் பிற்பகுதியில் விளக்கம் பெறும் ஆண்டுக் காண்க.

அரசன் : குலோத்துங்கன் சிறந்த கல்விமான். இவன் வேங்கி நாட்டிற் பிறந்தவன்; நன்னைய பட்டனைக் கொண்டு தெலுங்கில் பாரதம் பாடச் செய்த இராசராச நரேந்திரன் செல்வமகன் ஆதலின் இவன் தெலுங்கு மொழியில் வல்லவனாக இருந்தான்; வடமொழி அறிவும் பெற்றிருந்தான் என்பது கூறப்படுகிறது. தமிழில் சிறந்த அறிவுடையவன் என்று பரணி ஆசிரியர் குறித்துள்ளார். இவன் ‘கலையினொடும் கவிவாணர் கவியி னொடும் இசையினொடும், பொழுது போக்கியவன்[3]. கவிவாணர்’


  1. 288 of 1907
  2. 374 of 1908
  3. க பரணி, 263

சோ. வ. 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/275&oldid=1233631" இலிருந்து மீள்விக்கப்பட்டது