பக்கம்:சோழர் வரலாறு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

37



‘காந்தன் காவிரி கொணர்ந்தான்’ என்று கூறிய மணிமேகலை ஆசிரியரே கூறியுள்ளதும் இங்கு நோக்கற்பாலது.

காகந்தி காடு

காந்தன் கந்தனிடம் பூம்புகாரை ஒப்புவித்த பொழுது, “இந்நகரை நின் பெயரால் ‘காகந்தி’ என்று பெயரிட்டுப் பாதுகாப்பாயாக” எனக் கூறினன் என்று மணிமேகலை கூறுகிறது. அன்று முதல் பூம்புகார்க்குரிய பல பெயர்களில் ‘காகந்தி’ என்பதும் ஒன்றாகக் கொள்ளப்பட்டதாம்.

நெல்லூர்க் கோட்டத்தைச் சேர்ந்த ரெட்டி பாளையம் (கூடூர்த் தாலுக்கா) பாவித்திரி எனச் சங்க காலத்திற் பெயர் பெற்றிருந்தது. அதனைச் சுற்றியுள்ள நாடு ‘காகந்தி நாடு’ என அங்குக் கிடைத்துள்ள கல்வெட்டுகளிற் கூறப்பட்டுள்ளது. அஃது ஒரு காலத்தில் கடலால் கொள்ளப்பட்டிருந்ததால் ‘கடல் கொண்ட காந்தி நாடு’ எனவும் பெயர் பெற்றதாம்.[1] இவ்விரிடங்கட்கும் உள்ள தொடர்பு ஆராயத் தக்கது.

4. தாங்கெயில் எறிந்த செம்பியன்

பெயர்க் காரணம்

இச்சோழ மன்னன், ‘வானத்தில் அசைந்து கொண்டிருந்த பகைவரது மதிலை அழித்த வீரவாளை அணிந்த தோளையுடையவன்’ ஆதலின், ‘தூங்கு எயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்’ எனப் பெயர் பெற்றான். இவன் அழித்த அரண்கள் மூன்று எனச் சிலப்பதிகாரம் செப்புகிறது.


  1. Dr.S.C. Iyengar’s ‘Manimekalai - in its Historical Setting,’ pp. 48-49.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/39&oldid=480376" இலிருந்து மீள்விக்கப்பட்டது