பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். நான்காம் அதிகாரம். பராந்தகனிறந்ததும் இராஜாதித்தன் கி. பி. 947-ல் மகுடஞ் சூடினான். இவனாட்சியின் இரண்டாம் வருஷத்தில், துங்கபத்திரைக் கரையி லரசாண்டுவந்த இராஷ்டி) கூடவாசர்களை ஜயிக்கக்கருதிப்படை யெடுத்துச் சென்றான். இவன் காலத்தரசாண்ட இரட்டராஜன் (இராஷ்டிரகூடராஜன்) அகாலவர்ஷன் என்னும் மூன்றாங்கிருஷ்ண தேவன். இப்பெயர், கன்ன தேவனென்று மருவிவழங்குவதும் உண்டு. கன்னரதேவன், சோழ-ராஜாதித்தன் தன்மேல் படையெடுத்து வருவது தெரிந்து, தானே பெரிய சைன்னியங்களுடன் எதிர்கொண்டு, தக்கோலத்தில் யுத்தஞ்செய்ய, அதில் முறியடிக்கப்பட்டான். இராஜாதித்தன் வெற்றியடைந்தும், நெடுங்காலம் அரசாளக் கொடுத்து வைக்கவில்லை. அன்றிரவே, கன்ன தேவன்சகோதரிகணவனும், கங்கவமிசத்தானுமாகிய பூதிகன் அல்லது பூதராஜன் என்பவனால் நயவஞ்சகத்தாற் கொல்லப்பட்டான்.. இவ்வர சன்மனைவி, இலாடத்தரையன் பிரதிவிபதியின் மகளாகிய மஹாதேவடிகள். இவள் தமையன், ராஜாதித்தனிடம் சிற்றச னாதலால், இவன் பெயரையும் தன் பெயருடன் சேர்த்து, இராஜாதித் தன் புகழ்விப்பவர் கண்டனென்று விளங்கினான். இராஜாதித்தன் தன் பிரஜைகளால் நன்குமதிக்கப்பட்டவனா யிருந்திருக்கவேண்டும். இவனுடன் தக்கோலம் வரையில் யுத்தஞ் செய்யச்சென்ற ஒவ்வொருவரும், இவனால் திருநாவலூரிற்கட்டப் பட்டுள்ள இராஜாதித்தேசுவரமென்னும் கோயிலில், இவன் இறந்தபின், இவன்போற் பல திருவிளக்குகள் வைத்திருக்கிறார்கள். இராஜாதித்தனிறத்தலோடும் சோழராச்சியம் இரட்டவரசனான கனை தேவன் வசமாய்விட்டது. "கச்சியும் தஞ்சையும் கொண்ட

  • இஃது இப்பொழுது தெக்குளம் என்னும் பெயருடைத்தாய் ஆர்க் கோணம் ஜங்க்ஷனுக்கு ஆறுமைல் தூரத்திலிருக்கிறது.

t Ep. Ind. Vol. VII, P. 195 and Atukur Inscription of Krishna III, Ibid vol. VI. p. 51. Ibid P. 52.