பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். பாஜேந்திரதேவன் குந்தலத்துக்குப் படையெடுத்துச் சென்று, ஆஹவமல்லனை மறுபடியும் கொப்பத்து எதிர்கொண்டு பொருத்தில், முதன்முதற் சிறிது அபஜபங்கிடைத்தது. தானும் தன் யானையும் காயப்பட்டதோடு தனயானைச் சேவகரெல்லாரும் இறந்தார்கள். இதற்குள் ஒரு புதிய சோழசைன்னியம் உதவிக்குவந்து சேர்ந்தது. சாளுக்கியர் தோல்வியடைந்து, ஆஹவமல்லன் ஒடநேர்ந்தது. சாளு க்கிய தண்டநாயகர்களிற் பலரும் மடிந்தார்கள். அவர்களிற் சிலர், ஜயசிங்கள், புலகேசி, தசபன்மன், அசோகையன், ஆஸியன், பொட் டையன், நன்னி நுளம்பன் என்பவர்கள். ஒடித் தப்பினவர், வன்னி தேவன், துத்தன், குண்டமையன் என்பவர்கள். இவ்யுத்தத்தில் விஜயராஜேந்திரன் சாளுக்கியருடைய சத்துரு பயங்கரன், கரபத்திரன், மூலபத்திரனென்னும் மூன்று பட்டத்து யானைகளையும், மற்றும் பலயானைகளையும், அவர்களுடைய வராகக் கொடியையும், சத்தியவ்வை, சாங்கப்பை என்னும் இராஜபத்தினி களையும் பிடித்துக்கொண்டான். இவ்வரசன் காலத்து , ஈழமண்டலம் மறுபடியும் ஜயிக்கவேண் டியதாயிற்று. இவனும் மற்றொரு மானாபாணனையும், வீரசலாமே கனையும் தலைகொண்டதாகச் சொல்லிக்கொள்ளுகிறான். இவர்கள் முன்னமே கூறிய இருவரல்லர். ஏனெனில், இம்மானாபாணன் பாண் டியன் என்றும், வீரசலாமேகன் கலிங்கனென்றுங் கூறப்பட்டிருக் கிறது. ஆயின் இவர்கள் இன்னாரென்று விளங்கவில்லை. இப்பெயர் களையுடையவர் இருவரிருந்தார்களென்று மகாவமிசத்தால் தெரிய வருகிறது. ஈழம் இவன் கைக்கீழடங்கியிருந்ததென்பதற்கு ஐயமே யில்லை. இவ்வரசன் காலத்துச் சாஸனங்கள் சில அவ்விடத்தில் இருக்கின்றன. இவன் மகளாகிய மதுராந்தகி என்பவள், முதலாவது குலோத் துங்கனுக்கு வாழ்க்கைப்பட்டாள். இவ்வரசன் யுத்தங்களிலேயே உயிரிழந்திருக்கவேண்டும். ஏனெனில், இவனுக்கு யானைமேற்றுஞ்சிய தேவர் என்றொரு பெயரிருக்கிறது. இவ்வாசன் அரசாட்சியில் கி. பி. 1055-ல் ஓர் ஷாமம்வந்தது என்பது அடியில் வருவனவற்றால் விளங்கும். "முன்பு களியான