உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிக சரித்திரச்சுருக்கம். காலத்தே இவன்கீழ்ப்படிந்திருந்த சிற்றரசர்களுள் அமராபாணன் சீயகங்கனென்பவன் ஒருவன். இவனே , பவணந்தி முனிவரை நன்னூல் எழுதும்படி கேட்டுக்கொண்டோன். முதற்பராந்தகனால் நிலைபெறுத்தப்பட்டும், முதலிராஜராஜனால் மேன்மேலும் விருத்தியாக்கப்பட்டும் முதற்குலோத்துங்கனால் சீராக்கப் பட்டும் வந்த பெருத்த சோழராஜ்பமானது, தன்னை நிர்வமிக்க முடியாத சக்தியற்ற மூன்றாங்குலோத்துங்கன், அவன்மகன் மூன்றாம் இராஜ ராஜன், அவன் மகன் மூன்றாம் இராஜேந்திரன் என்னுமரசர்கள் கையி லகப்பட்டது. கலகம் போர் முதலியன ஒருவாறு ஓய்ந்து நாடெங்கும் அமைதியுண்டாகிச் செழிப்படையவே, அரசர்களும் சிற்றின்பங்களி ஈடுபட்டு, இராச்சியபாரத்தைத் தம் நீழுள்ளோரிடம் தங்கவிட்டு, தாங்களும் தேகவலிமையிழந்தார்கள். சிற்றரசர்களின் பெரும்பான்மை யோரும் சோழவமிசவிஷயத்தில் மிக்க இராசபக்தியுடன் நடந்து வந்த னர். ஆயினும் வேற்றுமையேபின்றி இந்நிலவுலகத்தில் எல்லோரும் ஒரே நிலையாக ஐக்கியமனத்துடனிருப்பதரி தன்றோ . "மதிரையும் ஈழமும் பாண்டியன் முடித்தலையும் கொண்டருளிய திரிபுவனச்சக்கர வர்த்திகள்." என்று ஆடம்பரமாய்ப் பட்டந்தரித்ததினாலே மற்றச் சிற்றரசர்கள் அஞ்சிவிடமாட்டார்கள். மகதை என்ற நடுநாட்டதிபதி ,யான, ஆர்க்களுருடையான் பொன்பரப்பினான் மகதைப்பெருமாளான இராஜராஜ வாணகோவரையனும் குலோத்துங்க வாணகோவரையனும், ராஜராஜக்காடவராயனும் குலோத்துங்கசே"முன் ஏகாதிபத்பத்தை எதிர்த்து வெளிப்படையாகப் பகைமைபாராட்டத் தலைப்பட்டனர். அக்காலத்தி, சோழ சைந்தியங்களுக்கு மகாசாமந்தனாயிருந்த கிளியூர் மலையமான் பெரியுடையானான இராஜாஜசதியாயன் தூண்டுதலால், பாண்டிநாடு கொண்டானான சம்புவராயன், செங்கேணி அத்திமல்லன் வீராண்டானான எதிரிலிசோழசம்புவராயன், அத்திமல்லன் பல்லவாண் டானான குலோத்துங்கசோழ சம்புவராயன், கிளியூர் மலையமான் ஆகார ரூரனான இராஜமqாச் சேதியாயன், குந்தன் நம்பூரனான இராஜ ராஜ நீலகங்கரையன், அம் மையப்பன் மருந்தனான இராச இராச மூவேந்தரையன், பாவந்தீத்தானான இராஜேந்திர சோழ சம்புவராயனான • செந்தமிழ்த் தொகுதி 3 பக்கம் 423.