பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சு) சோழவமிச்சரித்திரச்சுருக்கம். இவர்கட்கு புரவரித்திணைக்களத்தார்களென்றும், இவர்கள் மேலதிகாரி க்கு புரவரித்திணைக்களநாயகம், புரவரித்திணைக்களமுகவெட்டி யென்றும் பெயர். நிலவரி முதலியவை தவிரத் தலைவரியொன்றுமிருந்தது. அத னைத்தான் குலோத்துங்கன் (1) தவிர்த்தது. அவ்வாறு சுங்கந்தவிர் த்தமையால் "சுங்கந்தவிர்த்த சோழன்" என்னுஞ் சிறப்புப் பெயர் பூண்டானென்று முன்னமே சொல்லியிருக்கிறோம். கனர் குறளர்க்கு முன்னியூர் என்னுமிடத்தில் மாத்திரம் வரியில்லை. ஆதலால் இவ் வூர்க்குக் கூனர்குறளர் முன்னியூர் என்ற பெயர் வழங்கி வந்தது. ஊர்களைக் காத்தற்கென்று ஓர் வரி வாங்கப்பட்டு வந்தது. அத ற்குப் பாடிகாவல் என்பது பெயர். இன்னும் பற்பல தொழில்களுக்கும் வரியேற்பட்டிருந்தன. இப்போதைப் போலத் தொழில்வரியெனப் பொது ப்பெயர்கொடுத்து வெவ்வேறு வரி கொள்வதுபோலவின்றி ஒவ் வொரு தொழிலின் பெயரையும் சுட்டி, தறியிறை, தட்டாரப்பாட்டம், செக்கிறை எனப் பலபெயர்களாலும் வரியேற்படுத்தப்பட்டன. வரி களின் பெயர்கள் பலவாயிருத்தல் நோக்கி நம்மவர் அக்காலத்து வரிகள் பலவாயிருந்தனவென்று கருதலாகாது. சிற்சில சமயங்களில் அரசர்கள் ஊர்களைத் தானஞ் செய்யாது அவைகளினின்று வரும் இறைப்பணத்தைத் தானஞ் செய்வார்கள். சாதாரண மனிதன் ஒருவன் பூதானஞ் செய்யவேண்டின், அதன் விலையை உடையானுக்குக் கொடுத்துக்கொண்டு, அதனை இறையிலியாக்க, சபை யாரிடம் திட்டப்படி ஒரு தொகையைச் செலுத்திப் பிறகு இறையிலி பூதானமாக்கல் வழக்கம். அவ்வவ்வூர்களில் திரட்டும் வரிப்பணங்களைப் பரிசோதித்துச் 'சரியான பொற்காசு' என்று தீர்மானித்தல் பொன்வாரியக்காரர்கள் கவனிக்கவேண்டிய விஷயம். Ep. AD. Rep. for 1902-3. No. 607 of 1902. இந்நாட்டுக்கு ஆவூர்க் கூற்றத்து திருவிளக்குப் பிடிக்கும் கூனர் குறளர் இறையிலியான முக்கியூரில்” Sos S. I. I. Vol. II. p. 276. "ஆஆர்க் கூற்றத்துக் கூனர் என் முன்னிபூர்." -