பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அனுபந்தம் 1. தோற்பித்து, பின்னவனைத் திருப்புறம்பியத்திற் கொன்று தீர்த்தான். இவனே தமிழிலக்கியங்களிற் கூறப்படும் வாகுணபாண்டியன். மிக்க சிவபக்தன். விமலாதித்தன்:- கீழ்நாட்டுச் சாளுக்கியன். இராஜராஜனா (I)ல் ஜயிக்கப்பட்டுப் பின்பு அவன் மகள் குந்தவவை (I)யை, கலியாணஞ் செய்து கொண்டு தன்னாட்டைத் திரும்பக் கொடுக்கப்பெற்று, இராஜ பாஜன கீழ்ச் சிற்றரசனாக ஆண்டுவந்தான். அனுபந்தம் |I. ஒவ்வோர் அரசர்கள் காலத்து வரையப்பட்ட சாஸனமொவ்வொன் றிலும் அவர்கள் மெய்க்கீர்த்தியை முதலில் வரைந்தே மற்ற விஷயங் களை வரைவது வழக்கம். இம் மெய்க்கீர்த்திகளிலிருந்தும் சாஸனங் களில் ஆங்காங்கு காணப்படும் சில விஷயங்களைக்கொண்டுமே நம் தேசத்துச் சரித்திரங்களை எழுதவேண்டியிருக்கிறது. ஆதலால் இம் மெய்க்கீர்த்திகளைத் தமிழபிமானிகளும் சரித்திரவாராய்ச்சி செய்வோரும் வாசித்தல் இன்றியமையாததேயாம். பராந்தகன் 1. “மதிரையும் ஈழமுங்கொண்ட கோப்பரகேசரிவன்மற்கியாண்டு' இராஜராஜன் I. “திருமகள் போலப் பெருநிலச் செல்வியுந் தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளி வேங்கை நாடுங் கங்க பாடியும் தடிகை பாடியும் நுளம்ப பாடியும் குடமலை நாடுங் கொல்லமுங் கலிங்கமும் முரட்டொழிற் சிக்களர் ஈழமண்டலமும் (1) காந்தளூர்சாலை (3) முரட்டெழில்