பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

________________

85 பிறகு அப்பெரியார் பாண்டிய நாடு அகன்று, சோழ நாடு அடைந்து, நாங்கூர் சென்று, நாங்கூர் வேளைக் கண்டு, அவரிடம் தாம் வந்த காரணத்தைத் தெரிவித்தார். அவரும் மிக்க மகிழ்ச்சியடைந்து, "தமிழ கத்தை ஆளும் மன்னர் பிரானுக்கு மகட்கொடை நேரும் பேறு எனக்கு வாய்த்ததே!" என்று கூறி, அதற்கு இசைந்தார். பின்னர் அப்புலவர் பெருமான் நாங்கூர் னின்று புறப்பட்டு, உறையூர் வந்து சேர்ந்து, தம் முயற்சியின் பயனை அரசனிடம் தெரிவித்தார். அவனும் புலவர்க்கு உரிய சிறப்புக்களைச் செய்தான். பின்பு அப்புலவர் அவன் அனுமதி பெற்று, மண வினைக்குரிய நாளை விரைவிலேயே நிச்சயித்தனர். மண வினைக்குரிய நாள் குறுகியது. பாண்டியரும், சேரரும், தத்தம் பரிவாரங்களோடு வந்தடைந்தனர். வேளிர் பலரும் வந்தனர். எண்ணிறந்த பாணரும் வயி ரியரும் வந்து கூடினர். புலவர் பலர் வந்து அடைந்த னர்; அவரவர்க்கென அமைந்த இடங்களிலே தங்கினர். இரும்பிடர்த் தலையார் பல இடங்களிலும் நேரிற்சென்று, அவரவர்க்குரிய சிறப்புக்களைச் செய்து, உபசரித்து வந் தனர். திருமண மாளிகையிலே, குறித்த தினத்திலே நன் முகூர்த்தத்திலே சான்றோர் பலர் முன்னிலையில் திருமா வளவன் பாண்டியர் குலப் பெண்ணையும் நாங்கூர் வேள் மகளையும் திருமணம் புரிந்தனன். பாணரும் புலவரும் பாடி வாழ்த்தினர். அந்தணர் ஆசி கூறினர். அங்கு அடைந்திருந்தார்க்கெல்லாம் மணப் பொருள்கள் வழங் கப் பெற்றன. புலவர் பலரும் சிறப்பான பரிசில் பெற்ற