பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

________________

88 அவன், " இயற்கைச் செல்வமும் செயற்கை நலங்களும் சிறந்த இப்பெரிய நாடு ஒரு பேரரசன் ஆட்சியில் இருப் பின், எவ்வளவு சிறப்பு எய்தும்! பல சிற்றரசர் வலியற் றவராய் ஆண்டு வருதலாலன்றே அடிக்கடி போர்கள் பல நிகழ்ந்து குடிகள் பெருங்கவலைக்காளாகின்றார்கள்? ஓர் அரசும் ஒரு மொழியும் ஒரு கொடியும் இந்நாடெங் கும் ஒரு மனமாய் ஏற்றுக்கொள்ளப்படுமாறு செய்தல் இயலாத காரியமா? என்றான். அவர் முக மலர்ச்சியோடு அவனை நோக்கி, "ஐய, உருவப் பஃறே ரிளஞ்சேட்சென்னியின் மைந்தராகிய நும் சிந்தையிலே இவ்வெண்ணம் எழுந்தது சிறப்பே யாம். குமரியொடு வடவிமயத்தொரு மொழி வைத்துல காளும் மன்னராக எம் அரசர் ஓங்கியுயர வேண்டும் என்பதே இந்நாட்டவர் விருப்பமாம், என்றனர். வளவன் அப்பெரியாரை நோக்கி, " இறைவன் அருளும் தம்மைப் போன்ற பெரியோர் ஆசீர் வசனமும் இருப்பின், யான் அத்தகைய வேந்தனாக முயலலாம் என்றே எண்ணுகிறேன். முயற்சியால் முற்றுறா வினை யுண்டோ ? என்றான். பிடர்த்தலையார், சென்னியர் குல மணியே, முயற்சியால் முற்றாத வினையில்லை. யென்பது மெய்யே. நுமது முயற்சியும் இறைவனருள் துணையும் உள. அன்றியும், நுமது பிறப்புக் காலத்தே கோள்கள் நின்ற நிலையை ஆராய்ந்த காலக் கணக்கர் விரைவிலே பாரத பூமி முழுவதும் ஆளும் பேரரசு ஆதற்குரிய யோகம் நுமக்கு வரும் என உரைத்தனர். அறிஞர் உரை பொய்படுமோ? என்ற னர்.