பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சேர நாட்டின்கண் இருப்பதாகவே ஊகிக்க வேண்டும். 'குழவி பிறப்பினும்' என்ற பாடலைச் சேரமான் பாடிய போது நிகழ்ந்த போர் சேர நாட்டில் திருப்போர்ப் புறத் தில் நிகழ்ந்ததெனவும், பொய்கையார் களவழி நாற்பது பாடக்காரணமாயிருந்த போர் சோழ நாட்டிலே கழுமல நகர்க்கருகே நிகழ்ந்த தெனவும் ஊகிக்கலாம். இப்போர் சோழ நாட்டகத்ததாகிய வெண்ணிப் பறந்தலையில் நிகழ்ந்ததென்று நற்றிணையுரையாசிரியர் ஸ்ரீமான். பின் னத்தூர் நாராயணசாமி ஐயர் கூறுவர். இவ்வாறு இரண்டு போர்கள் நிகழ்ந்தனவென்று கொள்ளாவிடின், கலிங்கத் துப் பரணி யாசிரியர் சயங்கொண்டார், ( களவ ழிக்கவிதை பொய்கையுரை செய்ய வுதியன் கால்வ ழித்தளையை வெட்டியர சிட்ட பரிசும் என்று பாடியது பொய்யாய் முடியும். இவ்விரண்டு செய்திகளையும் பொருத்தக் கருதிச் “சங்கத் தமிழும் பிற் காலத் தமிழும் என்ற தம் உரை நூலிலே மகா மகோ பாத்தியாய உ. வே. சாமிநாதையரவர்கள், 'துஞ்சிய என்ற சொல்லுக்கு மயங்கிக் கிடந்த' என்று பொருள் கொள்ள வேண்டும் என்பார்கள். 'நச்சினார்க் கினிய னெச்சில் நறுந் தமிழ் நுகர்வர் நல்லோர்' என்பது போல, ஐயரவர்கள் இட்ட பிச்சையாகத் தமிழ் பயின்று வரும் சிறியேன் அவர்கள் கருத்தை மறுத்துப் பேசத் துணிந்து வந்தேனிலேன்; நன்கு ஆராய்ந்து என் உள் ளத்துக்கு உண்மையென்று புலப்பட்டவற்றைக் கூறத் துணிந்தே இங்ஙனம் எழுதினேன். புறநானூற்றிலே பிற இடங்களிலே இச்சொல் இறந்த என்றே பொருள் தருதலாலும், சாஸன ஆராய்ச்சியாளர் ஸ்ரீமான் வி.