பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111

________________

111 கரிகாலன் மங்கள வாழ்த்துக்களினிடையே ஐவகை வாத்தியங்களும் முழங்க, நகர்க்குட் புகுந்தான். சோழர் தமிழ்ச் சங்கத்திலே புலத்துறை முற்றுதற்கு வந்திருந்த புலவர் பலரும் தத்தம் அன்பும் ஆதரமும் தோன்றப் பல வகைச் செய்யுட்களால் அரசனை வாழ்த்தினர். நகர்க்குட் புதுமையாக மனைகள் அமைத்துக் குடி புகுந். தார் பலர்க்கும் நல்வரவு கூறப்பட்டது. அரசர் பிரா னும் மன மகிழ்ந்து, அங்கு நிறைந்திருந்தார் பலர்க்கும் உபசார மொழிகள் கூறினன். பின்னர் அரசுவாவின் மீது அமர்ந்த வண்ணமே நகர் வலஞ் செய்து, தேவால யங்களிலே நைமித்திக பூஜைகள் நிறைவேற்றி, அந்தண ராசி பெற்று, அரண்மனை புகுந்தான். இரும்பிடர்த் தலையார் அன்று அமைந்த ஆனந்தப் பெருக்கின் எல்லை யற்ற தன்மையை இன்னதென அறிய எவரால் இயலும்? பின்னர்ச் சில தினங்கள் மங்களமுழக்கத்திடையே கழிந்தன. அப்பால் ஒரு தினம் இரும்பிடர்த் தலையார் புலவர் பலர்க்கும் சிறப்புக்கள் அவரவர்க் கேற்றவாறு செய்வித்தனர். பின்பு அயல் நாட்டவர் அனைவரும் தத் தம் இடங்கட்கு விடைகொண்டேகினர். மக்கள் நால் வரும் கல்வி நிரம்பப் பெற்றவர்களாய்ச் சோழர் தமிழ்ச் சங்கப் புலவர்களோடு அளவளாவி இன்புற்றிருந்தனர். மூத்த குமாரியாகிய ஆதி மந்தியார் என்ற அருந்தமிழ்ப் புலமை நலம்படைத்த செல்வி சேர நாட்டரசகுலத்துப் பிறந் தானாகிய அத்தி யென்பானை மணம் புரிந்துகொண் டாள். அவ்விருவரும் சேரநாட்டிற் சில காலமும் சோழ நாட்டிற் சில காலமும் வாழ்வாராயினர். கரிகாலன் இவ் வாறு பல வகையிலும் இன்புற்று வாழ்ந்திருக்கையிற்