119
________________
119 யுள் முழுவதையும் உரிய முறைப்படி படித்து முடித் தார். புலவர் அனைவோரும் கேட்டு மனமுருகி, மகிழ்ச்சி பூத்தனர். வளவனும் முகமலர்ந்தான். பின்னர் அங்கு அந்நூலைப் பற்றிப் பின் வருமாறு அங்கிருந்தார் அனைவரும் பேசிக்கொண்டனர். வளவன்:- ஐய, புலவர் பெருமானே, நுமது பாட்டு மிகவும் சுவையுடையதாய் அமைந்திருக்கிறது. அதன்கண் உள்ள ஒவ்வொரு பொருளும் அனுபவ மிக்க ஓவியம் வல்லான் தீட்டிய ஓவியம் போல அமைந் துளது. அவற்றுட் சில கருத்துக்களை நுமது உரை நடையிற் கேட்க விரும்புகிறோம். உருத்திரங் கண்ண னார்:- அரசர்க்கரசரே, எதைக் கேட்பினும் எடுத்து உரைக்கவும் பொருள் விரிக்கவும் சித்தமாயிருக்கிறேன். வளவன்:- இந்நாட்டுப் புலவர் பலர் இங்கு இருக் கின்றனர். ஒவ்வொருவரும் தத்தமக்குப் பிரியமாய் இருக்கும் பொருள்களை விசாரித்தறியலாம். எம் மனத் துக்கு இன்பம் ஊட்டும் பொருள்கள் பல உள. காவிரி யைப்பற்றி நீவிர் கூறியுள்ள கருத்துக்கள் தன்மை நவிற் சியே. அவற்றை ஒரு முறை சுருக்கிக் கூறுமின். உருத்திரங் கண்ணனார்:--வானவுலகத்திலேயுள்ள வெள்ளி என்னும் மீன் தான் நிற்றற்குரிய வடதிசையில் நில்லாமல் தென் றிசைக்குப் போயினும், மழைத்துளியை உண்டு வாழும் வானம்பாடி மனம் புலரும்படி மேகங் கள் வராது மறைந்த வற்கட காலமாயினும், தான் பொய் படாது குடக மலை யிடத்தே பிறந்து காலந்தோறும் பெருகி வந்து கடலிலே கலக்கின்ற வசையற்ற புகழை