பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/2

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இந்நூலாசிரியர் எழுதிய 'தமிழ்ப் புலவர் வரலாறு பாண்டிய மன்னர்' என்ற நூல்களைப்பற்றிய அபிப்பிராயங்கள் : மஹாமஹோபாத்தியாயர் உ. வே. சாமிநாதையரவர்கள் அபிப்பிராயம் தமிழ்ப் பண்டிதர் வித்துவான் மா-ா-ஸ்ரீ நா.கனக ராஜையர் இயற்றிய தமிழ்ப் புலவர் வரலாறு மூன்று புத்தகங்களிற் சில பகுதிகளைப் படித்துப் பார்த்தேன். இவற்றிலுள்ள சரித்திரங்கள் தக்க ஆதாரங்களை யுடை யனவாய் முன்னோர் கொள்கையினின்றும் வேறுபட லின்றித் திருத்தமான நடையை யுடையனவாய் அமைக் திருத்தலின், பாடசாலையிற் படிக்கும் மாணவர்களுக்கும் ஏனையோர்க்கும் மிக்க பயனளிக்கு மென்பது எனது கருத்து. இப்புத்தகங்கள் இயற்றியவருடைய ஆராய்ச் சித் திறத்தை நன்கு புலப்படுத்துகின்றன. . தியாகராஜ விலாசம், ) இங்ஙனம், திருவேட்டீஸ்வரன் பேட்டை, சென்னை, 1-8-230. ) வே. சாமிநாதையர் செந்தமிழ்ப் பத்திராசிரியர் அபிப்பிராயம் தமிழ்ப்புலவர் வரலாறு (ஒன்று முதல் மூன்று பகுதிகள்) இவை வித்துவான் பண்டித ஸ்ரீமத் கனகராஜைய ரவர்களால் எழுதப்பட்டு மதுரைப் புஸ்தக வர்த்தகர் ஸ்ரீமான் இ. மா. கோபால கிருஷ்ணக்கோனா ரவர்களால்