உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

________________

அதனை அமைச்சரோடு கலந்து ஆலோசித்துத் தக்க முடிவு கூறுவோம். - - மன்னர் பிரான் வாய் மொழி கேட்டு அவைக் களத்திருந்த அறிஞரெல்லாம் சிறிது நேரம் தமக்குள் ஆலோசனை செய்தனர். பிறகு புலவர் ஒருவர் எழுந்து, அவ்வாலோசனையின் முடிவை வெளியிட்டனர் : " அரசரே, உலகிலே இல் வாழ்க்கை யென்னும் தொடர்ச்சி அறா வண்ணம் இல்லறத்தான் ஒவ்வொரு வனும் முயல வேண்டும் என்று வேதங்கள் விதிக்கின் றன. அரச மரபு முறை பிறழ்ச்சியின்றித் தொடர்ச்சி யாய் வரவேண்டுமென்பது சான்றோர் கருத்தாம். நுமது மாபின்கண் முன்னே பிறந்த பெருமன்னர் புகழெல் லாம் நீவிர் அறிவீர். எதிர் காலத்திலும் நுமது மரபின் புகழ் வளர்ந்தோங்குகவெனக் குடி மக்கள் கருதுவது இயல்பே. இரு மகளிரை மணம் புரிந்தும் மகப் பேறு பெறாமையால், மூன்றா முறையாக ஒரு பெண் கொள்ள விரும்புகிலீர்; இளையவரசர்க்கு மணம் முடிப்பிப்பதாகக் கூறுகின்றீர். நாட்டின் உரிமையிலே நாட்டம் உடையார் பலர் இப்பொழுதே எழுவதாக அறிகின்றோம். எவர் மண முடித்துக் கொள்வதாயினும், விரைவிலே மணம் புரிந்துகொண்டு, எமக்கு ஓர் இளவரசனை நல்கல் வேண்டு கிறோம். இவ்வரசுக்கு உரிமை யுடையார் இன்னார் என்று உறுதி யுறாத நிலையொன்று உண்டாமாயின், அஃது எமக்கும், இந்நாட்டுக்கும், எம் குடியிலே பின் வருவார்க்கும் பெருந்துயர் விளைக்கக் கூடிய செயலாம். ஆகையால், அரசர் பிரானே, நும் மாபின் உரிமைக்கு உரியான் ஒரு செல்வனை எம்பொருட்டு விரைவிலே தர வேண்டுகிறோம்.