பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

________________

கிருந்த வீரர் அனைவர்க்கும் தெரிதரலாயிற்று. அவ் வூரிலே குபவர் குடியிலே பிறந்த ஒரு பெண்பாற் புலவர் இவ்வருஞ்செயலைக் கண்ணாரக் கண்டு மன முருகிக் கரி காலனிடம் வந்தார். - கரிகாலன் பாசறைப் புறத்தே உலவிக்கொண்டிருந் தான். வெண்ணிக் குயத்தியார் அவனருகில் வந்து நின் றார். கரிகாலன் உடனே அவரது புலமைக்கேற்ற மரி யாதை தந்து, வரவேற்றான். அவனது இளம்பருவத்தை யும் இரு பெரு மன்னரும் பதினொரு வேளிரும் பொரு தழிய வென்ற செயலையும் நினைத்து வெண்ணிக் குயத்தி யார் அதிசயித்தார்; ஆயினும், தாம் கண்டு வந்த காட்சி யைக் கூற விரும்பிப் பின் வரும் கருத்தமைந்த ஒரு செய்யு ளிசைத்தனர். ( வளவர் குலத் தோன்றால், நீர் இத்துணை இளம்பரு வத்தில் இத்தன்மையான பெரும்போரில் வென்றது அருஞ் செயலாகாது. ஏனெனில், நும் முன்னோர், நிலத்தகத்தும் போர் முயற்சியாலே சிறந்தவராயிருந்ததோடமையாமல், கடற்போரிலும் வல்லவராயிருந்தனர். அவர் கடந்போர்க்கு மரக் கலங்களிலே செல்லுங் காலங்களில் தமக்கு வேண்டிய வண்ணம் காற்று வீசாமலிருக்குமாயின், காற்றிற்குரிய தேவ னையேவித் தமக்கு ஆகவேண்டும் முயற்சித் துறையை முடிப் பாராயிருந்தனர். மதக் களிற்றின் பிடரகத்தமர்ந்து போர் புரியும் மன்னர் மன்னரே, இருபேரரசரை எதிர்த்து நின்று வெற்றி கொண்ட நுமது புகழ் சிறப்புடையதே யாயினும், உலகத்திலே மிக்க புகழ் எய்துமாறு இவ்வெண்ணிப் பறந் தலையில் புறப்புண் பட்டதற்கு நாணி வடக்கிருந்த .சேரலா தர் நும்மினும் நல்லவராவர் என்றே யான் கூறுவேன்” *

  • புறநானூறு-- செய், 66.