பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

________________

83 மோடு மனமொத்து வாழ்வார்கள். இதற்கு அங்குப் போய்ப் பேசி எண்ணியதை நிறைவேற்றத் தக்க அறிவு டையாரை அனுப்பல் வேண்டும். வளவன் :- வேளிர் குடிகளிலே நம் மரபிலே பெண் கொள்ளும் வழக்கம் உண்டே! இப்பொழுது அப்படிக் கொடுத்தற்குரியார் ஒருவரும் இல்லையா? கொடுத்தற் குரிமையுடைய குடிகளிலே பெண்கள் இல்லையா ? அமைச்சர்:- சோழர் குடிக்குப் பெண் கொடுத்தற் குரிமையுடைய வேளிர் பலர் இருக்கின்றனர். அவருள் இப்பொழுது நாங்கூர்த் தலைவராகிய வேளிர் குடிப் பெரியார்க்கு அருங்குணங்கள் பலவும் அமைந்த ஒரு பெண் உண்டு. அப்பெண் மணப் பருவம் உடையளா யிருப்பாள் என்றே எண்ணுகிறேன். வளவன்:- ஐய, பாண்டியர் குலத்துக் குமரியை மணந்துகொள்ளல் நலம் என்று நீவிர் எண்ணுகின் றீரா? அல்லது வேளிர் குலக் குமரியை மணத்தலேசிறப் பென்று எண்ணுகிறீரா? அமைச்சர்:- இருவரும் மணத்தற்குத் தகுதி யுடையரே. இருமகளிரையும் ஒரு நிகராகமதிக்கும் முறை ஏற்படுமாயின், இருவரையுமே மணந்துகொள்ளலாம். மரபின் வளர்ச்சியைக் கருதும் அரசர் பொதுவாக இரு பெண்டிர்களுக்குக் குறையாமல் மணம் புரிந்துகொள் ளுதல் தொன்று தொட்ட வழக்கமாம். வளவன்:- இருவரையும் மணந்தாற் பாண்டியர் குமரி உயர்ந்த மதிப்புக்கும் வேளிர் மகள் அவளிற் சிறிது தாழ்ந்த மதிப்புக்குமே உரியர் என்று உலகினர்