பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்கலம் செல்கையில் அதன்பின் புதியதோர் பால்வழி மெல்லத் ததும்பி வானம் எங்கும் பொங்கிடும், வெண்ணி லாத்தான் இருளில் குறியிடம் சேர்கையில் மேவிய அவ்வொளி நீளும் தடம்போல் பின்வரும்.

குதிரை மேலே ஏறி வரும்ஒர் வீரன்போல் குமுறி வெள்ளம் இருமலை முகட்டிடைப் பாய்ந்திடும், புதிய வைகறை மாலைக் கருக்கலும் புத்தொளி புலப்ப டுத்தியே மாய மருட்கை காட்டிடும்.

கட்டாரி

மின்னும் இருபால் அலகுகள் மேவும்

ஒருகட் டாரிதனில், முதுகும் முதுகும் இணைந்திரு புறமும்

கூர்மை திகழ்ந்திடுமே. ஒன்றாப் பகைமேல் இன்னற் போதில்

இடையூறு எழும்போதில், சென்று எதிர்த்து வெற்றியை இழிவைச்

சேர்ந்து பகிர்ந்துண்ணும்.

தொழிலின் கமுக்கம் தெரிந்தோர் மட்டும்

சுடர்கொள் கட்டாரி வழிவழி யாக வடிக்கும் பணியை

வாழ்வில் கொண்டார்கள்; தொழிலை ஒருவன் தந்தை வழியில்

தொடர்ந்து கற்றிடுவான், அழிவில் அன்பால் மைந்தற் கன்றி

யார்க்கும் புகட்டாரே.

கட்டாரி யின்முறை அடிமைத் தனத்தில்

கட்டுப் படாமுறையே: கட்டாரி யின்சூள் உரையை முரித்தல்

இயலாக் கடுமைஅது.

9 |