பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகர்கின் றதுவே, ஆயிரம் ஆயிரம் கால்க ளுடனே, ஆயிரம் ஆயிரம் கண்க ளுடனே, ஆயிரம் ஆயிரம் முகங்க ளுடனே. உணர்வன யாவையும், காண்பன யாவையும், ஒலிப்பன யாவையும் உட்கொண் டிருக்குமே. அதன்நினை வாற்றலும் எல்லையுள் அடங்குமோ? மக்களின் இனிய மொழிகள் சிற்றுார் பேரூர் முற்றிலும் பரவிடும். கனவில் காணும் அனைத்தையும் முயல்வ தனைத்தையும்

மக்கள் தாமே வழங்கிட முடியும்.

வேனிற்காலத்தில் ஒரு நாள்

வயது பதினெட்டு வாய்த்ததும் தேர்ந்தெ டுத்திடப் பாதைகள் எத்தனை. இன்இள வேனில் பருவம், கதிரவன் ஒளிர்கிறான், புத்தம் புதிய புற்களின் பொலிவு! வேனிலின் கிளர்ச்சி உன்னையும் நன்றாய் ஆட்டி வைத்திடும். உன்முன் உள்ள வாய்ப்பெலாம் காணின் உன்தலை சுற்றும். நம்பிக்கைப் பெரும்படை உன்முன் நடந்திடும். காற்றில் அசைந்திடும் கொடியை எல்லை இல்லாக் காலப் புயலோ

எரிதழல் ஆக்கிடும்.

167