பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரைப்படை விட்டுஅவர் கடற்படை சேர்ந்தார். தாயே உன்மகன் தலைசி றந்தஓர் அலைகடற் பாங்கில் உலவிடு கின்றான். உயிருடன் உள்ளாய் என்பதைக் கூட அறிகிலான். தாயே இருந்துஒரு மடலினைப் போரிசுக்கு எழுது. போக்கலாம் விடையை: அவற்குச் செய்தி அணுகிட வில்லையேல் கப்பல் துறைஒன்று சேரும் பொழுதில் கப்பல் தலைவன் எழுதுவான் ஒருவரி போர்க்கா லத்தில்இப் போக்கெலாம் உண்டே......

1 4

கடலைக் கண்டால் அக்கடல் நினைப்பேன் குன்றுகள் காணின்அக் குன்றுகள் நினைப்பேன் துயரும் பழைய துயரையே கிளறும்; ஒவ்வொன் றும்மற் றொன்றினைக் கிளறும் பிறர்துயர் என்றொரு துயரமே இல்லை. இதனை ஏற்றிடா ஒருவன் உலகில் கொலையினைச் செய்கிறான் அல்லது கொலைசெயப் பழக்கப் படுத்தப் படுகிறான்.

189