பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றன் அருமந்த காதலியின்-கணை

ஆழியை விண்ணினில் விட்டெறிந்தேன்.

பின் என்றன் காலை நிலத்திருந்தே-நனி

பிய்த்துவிண் ஏறிநான் தேடலுற்றேன்:

இன்று விசும்பினில் நான்பறந்தால்-அதும்

இவ்விதமாய்க் கற்றுக் கொண்டதுதான்!

மால்டேவியச் சுரங்கம்

மேன்மை மிகுந்த மால்டே வியமே, என் நிலச் செல்வமே, உன்பா விருந்தே எல்லா வற்றையும் பெறுகின் றேன்.நான்...... வன்மை செறிந்தநின் வெண்மரு திருந்து திண்மையும் மிடுக்கும் நன்குநான் பெற்றேன். முதிர்ந்த நின் கோதுமைக் கதிர்த்தலை இருந்தே இணக்க வணக்கப் பண்பினைக் கற்றேன். எண்ணிலாக் காலம் மண்ணினில் நிலைத்தே ஆக்கம்.உற் றெழுந்தஉன் ஒக்மரத் திருந்து தேக்கிய உறுதியும் நோக்கின் மிடுக்கும் நெஞ்சத் திடமும் மிஞ்சிடப் பெற்றேன். செல்வ வளந்தரு குன்றுகளி லிருந்தே நல்அடக் கத்தினைப் பல்கிடக் கற்றேன்; எழுச்சி மிகுந்தஉன் நாட்டியத் திருந்துதான் விழிப்பும் உணர்ச்சியும் தழல்எனப் பெற்றேன். கொடிமுந் திரிகளின் படர்தலி லிருந்துதான் இறுகத் தழுவிடும் இன்கலை கற்றேன். உன்றன் மிகுந்த நாட்டுப்பாட் டிருந்தே என்றன் மென்துயர் இசையினைப் பெற்றேன். தேனுாற் றானஉன் கான்சுனை யிருந்துதான் கலகலத் திடும்என் களிநகை பெற்றேன். இன்றென் முன்னோர் கல்லறைமுன் நின்றே என்பொன் னாடே, உன்னை நான் என்றும்நே சிப்பேன் என்றுசூள் உரைக்கிறேன்!

237