பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:றன. இளைஞர்களின் கல்வியின்பால், இவற்றின் செல் வாக்கு அதிகம். இவற்றின் நடவடிக்கைகளும், நிகழ்ச்சி |- o நிரல்களும் கல்வி நிலையப் பணிகளோடு இணைக்கப்பட் டுள்ளன. இவை, திறன் மிக்கோருக்காகத் தனியாக உருவாக்கப்பட்டவை அல்ல. இவை, இளைஞர்களின் ஒட்டு மொத்த ஒழுங்கு நடத்தை அரசியல் தெளிவு, குடிக் கடமையுணர்வு ஆகியவற்றை வளர்க்கும் நோக்கத்தோடு செயல்புரியும் மக்கள்' அமைப்புகள் ஆகும். இவை முன் லுக்கத்தையும், தலைமைச் சீர்மைகளையும் பயன்படுத்த நிறைய வாய்ப்புகள் கொடுக்கின்றன. இவை திறன்மிக் கோரின் கல்விக்கும் பெருந்துணையாகின்றன. அக்டோபரிஸ்டு இயக்கம், பயணியர் அமைப்பு, கம் சோமால் ஆகியவை இளைஞர் அமைப்புகளாகும். பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அக்டோபரிஸ்டு இயக்கத்தில் சேரும். பயணியர் அமைப்பைப் போலவோ கம்சோமாலைப் போலவே அக்டோபரிஸ்டு இயக்கம் கட்டுக் கோப்புகள் அடங்கியதல்ல. அக்டோபரிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்தவர், ஒரு 'பாட்ஜ் அணிவார். அதில், நடுவில் லெனின் படமும் பக்கத்தில் சிகப்பு நட்சத்திரங்களும் இருக் கும். உரிய காலத்தில், சிறுவர், சிறுமிகள் பயணியர் அமைப்பில் சேரும்படியான மனப் பக்குவத்தை ஏற்படுத் துவதே இன்வியக்கத்தின் நோக்கம் அக்டோபரிஸ்டு இயக் கத்திற் சேர்ந்தவர்கள் படிப்பில் நன்ருயிருக்க வேண்டும்; ானவர்களுக்கான விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும். பத்துக்கும் பதினேந்துக்கும் இடைப்பட்ட வயதினர், பய'ைபi அ ை ப்பில் சேரலாம். அநேகமாக பள்ளியில் படிக்கும் அந்த வயதினர் அனைவருமே அப்பள்ளியின் பய னியர் அமைப்பில் உறுப்பினர்கள் ஆவார்கள். அதில் சேர்க்க விட்டால், அது சமுதாய இழிவாகக் கருதப் படும். பயணியர்களைப் புதிதாகச் சேர்க்கும்போது, மெல் மைதியுடைய சடங்கு நடக்கும். அச்சடங்கின் போது புதுப் பயணியர், அமைப்பின் வாக்குறுதிகளைச் சொல்லு வார். பிறகு, அவருக்கு சிகப்பு பயணியர் கழுத்துக் குட்டை கொடுக்கப்படும். 109