பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த புரட்சிக்கு முன்பு, தாஜிகிஸ்தானில் ஒரு நூலகங்கூட இல்லை. தாஜிக் மொழியில் நூல்களோ சஞ்சிகைகளோ வெளியிடப்படவில்லை. இன்று இக்குடியரசில் ஆயிரத்திற்கு மேற்பட்ட நூலகங்கள் இருக்கின்றன. இக்குடியரசு, ஆண்டுதோறும் மொத்தம் 50 இலட்சம் நூற்பிர திகளை வெ ளியிடுகிறது. புரட்சிக்கு முன்பிருந்த கஜாக்ஸ்தானில் அச்சடிக்கும் வசதியே இல்லை. இன்று இக்குடியரசின் வெளியீட்டு நிறு வனங்கள் ஆண்டுக்கு 1,500 தலைப்பு நூல்களை வெளியிடு கின்றன. அவற்றின் மொத்தம் 2 கோடிப் பிரதிகளுக்கு மேலாகும். நெடுந்தொலைவில் உள்ள சுகோட்கா தீபகற்பத் தில், புரட்சிக்கு முன்பு, மக்கள் மொழிக்கு வரி வடிவம் இல்லை. யாருக்கும் படிக்கத் தெரியாது; படிப்பதற்கும் எதுவும் இல்லை. இன்ருே. சுகோட்காவில் உள்ள ஒவ்வொரு சிற் நூரிலும் நூலகம் இருக்கிறது. அப்பகுதி மக்கள் எழுத்து மொழி பெற்று விட்டார்கள். அவர்களுக்கென்று அருமை பான இலக்கியம் உருவாகி விட்டது. முற்காலத்தில் புகழ்பெற்ற இரஷ்ஷியர்கள். தங்கள் தனி நூலகங்களில் சிறந்த நூல்களைத் திரட்டி வைத்திருந் நார்கள். இன்று, அநேகமாக எலல சோவியத் குடும் 1ங்களிலும் தனி நூலகம் இருக்கும். அவற்றில் தங்களுக்கு பிருப்பா ஆ திரியர்களின் நூல்கள் இடம் பெறுவ தாடு, குடும் 1 உறுப்பினர்கள் ஆற்றும் வேலைகளோடு |தாடர்புடைய நூல்களும் இருக்கும். பத்தாண்டுகளுக்கு முன்பு, தனியார்களிடமிருந்த வகங்க ைகிரா சங்கம், பள்ளிக்கூடம், குடியிருப்பு ள் ஆகியவற்றிற்கு நன்கொடையாக வழங்குவதற்கு ஒரு க்கள் இயக்கம் உருவானது. இன்று சோவியத் நாட்டில், |ப்படி அளிக்கப்பட்ட பல்லாயிரம் நூலகங்கள் உள்ளன. அந்நூலகங்களின் பராமரிப்பை அரசு ஏற்றுக்கொள்ளுகிறது. ஜான் ரீட் என்பவர், உலகைக் குலுக்கிய பத்து நாட் ள்' என்னும் தமது நூலில் எழுதியுள்ளதைப் பார்ப்போம். - , 115