பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* s 曹 -- - = - - - - உயர்சிகரங்களே சோவியத் கல்வியாளர்கள் தொடர்ந்து எட்டிப் பிடிப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை. எல்லாச் சிறுவர்களையும் பிடிக்கும் வகையில், தங்கள் வலைகளைப் பர வலாக வீசுகிருர்கள்; இளமையிலேயே பிடித்துக் கொள்ளு கிருர்கள். எல்லார்க்கும் கல்வி உரிமை உறுதிப்படுத்தப் பட்டிருப்பதோடு, அதற்கான வசதிகளே முழுமையாகக் கிடைக்கச் செய்துள்ளார்கள். இத்தகைய நிலையில், சோ வியத் மக்கள், சமுதாய இயல், கலையியல், மானிட இயல், அனைத்துலக இயல்களில் புதுப் புது உறவுகளுக்கு வளர்வது இயற்கை. - சோவியத் ஒன்றியம், வளர்முக நாடுகளுக்குக் கற் பிக்கும் பாடம் ஏதாகிலும் உண்டா? ஆம். அது நமக்குக் கற்பிக்கும் பாடங்கள் பலவாகும். மனமுண்டாளுல் இடம் உண்டு. இதுவே, சோவியத் ஒன்றியத்திடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடமாகும். ஒரு நாட்டின் பொருளியல், சமுதாய நிலைகள் எப்படியிருப் பினும், அந்த நாட்டில் ஒருமித்த போதிய வலிமையுள்ள மனம் உண்டாயின், அது தனது பிரச்சினைகளைத் தீர்க்கும் வழியைக் காண முடியும். மக்கள் முன்னேற்றம், வேளாண்மை வளர்ச்சி, தொழில் அபிவிருத்தி ஆகிய எல்லா முன்னேற்றங்களுக் கும் வேர், கல்வியே என்பதை சோவியத் வரலாறு தெள்ளத் தெளியக் காட்டுகிறது. வளர்முக நாடுகள், நாட்டின், மக் கனின், வளர்ச்சிக்கு வழி, கல்வி என்னும் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். - பொறுக்கி யெடுக்கப்பட்ட சிலருக்கே உயர் அறிவு நாட்டமும், கல்வி ஈடுபாடும் கைவரும்: பொது மக்களைப் பொறுத்தமட்டில், எண்ணையும், எழுத்தையும் கற்பது நிற்காவிட்டாலும், ஒரளவு பொது அறிவோடு நிறைவு கொள்ள வேண்டும்' என்னும் பாசி படர்ந்த மூட நம்பிக் கையை வளரும் சமுதாயம், காலந் தாழ்த்தாது கைவிட வேண்டும். மாருக மனிதர்களுடைய கற்கும் ஆற்றலுக்கு வரம்பே இல்லை என்னும் கோட்பாட்டில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ள வேண்டும். நாம், அக்கோட்பாட்டினைத் Io