பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டம் பெற்றவர்கள் ஆவார்கள். இத்தகையோரை "உயர் மட்ட தகுதி பெற்ற ஆசிரியர்கள்’ என்று குறிப் பிடுகிருர்கள் . தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் தகுதி யையும் மேல் வகுப்பு ஆசிரியர்களின் தகுதி அளவிற்கு உயர்த்துவதற்கு, கல்வி வளர்ச்சி திட்டத்தில் ஏற்பாடு செய்திருக்கிருர்கள். - வளர்ச்சித் திட்டங்களில், பள்ளிகளுக்குப் புதிய கட் டடங்கள் கட்டுவதற்கு மிக முன்னுரிமை கொடுத்திருக் கிருர்கள். போதுமான, பொருத்தமான, பள்ளிக்கூட தள வாடங்களும் பாடத்துரைக் கருவிகளும் இருந்தால்தான், கல்வி முயற்சி கைகூடும். ஆகவே, போதுமான தளவாடங் களையும் விஞ்ஞான ஆய்வுக்கூடங்களையும் தொழிற்கூடங் களையும் காட்சிக் கேள்வி துனைக் கருவிகளையும் கொடுப் பதில் போதுமான கவனம் செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாணவரும் தனித்தனியே ஆய்வுகளே நடத்துவதற்கு வேண்டிய அளவு கருவிகளைக் கொண்ட விஞ்ஞான ஆய்வுக்கூடங்களே நிறுவுவதே, சோவியத் ஆசிரியர்களின் நோக்கமாகும். ஒவ்வொரு பள்ளியிலும் அருமையான பூகோள படங்களும் விளக்க அட்டவணை களும் நிறைந்துள்ளன. பள்ளிப் பணியில் நூலகத்திற்கு முக்கிய இடம் உண்டு. சோவியத் பள்ளிகளில், வெவ்வேறு வயதினருக்கு ஏற்ற நூல்கள் நிறைந்துள்ளன. இளம் பிள்ளைகளாக இருக்கும்போதே, படிக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் மதிப்பையும் சோவியத் கல்வியாளர்கள் உணர்ந்துள்ளார்கள். சோவியத் ஒன்றியம், இளைஞர்களுக்காக, orוח ש oדומו וזobז சஞ்சிகைகளை வெளியிடுவதன் மூலம், இவ்வுணர்விற்கு உருக் கொடுத்து விட்டதி. எல்லாப் பள்ளிகளிலும் இவற்றில் பல கிடைக்கும். பள்ளி நூலகத்தில் பயிற்சி பெற்ற நூலகரும் இரண்டொரு உதவியாளரும் பணி புரிவார்கள். சோவியத் பள்ளிகள் ஏதாவதொரு அயல் நாட்டு மொழியை கற்றுக் கொடுக்க வேண்டும். ஆகவே, பள்ளி நூலகங்களில் 62