பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனிமூடும் ஆர்க்டிக்கில் பணிகள் புரிந் தாலும், பாமீரின் பனிக்காட்டில், தென்பக்கக் கடலில் தனியான ஆராய்ச்சி புரிந்தாலும், சப்தம் தனை மிஞ்சும் வேகத்தில் விண் ணிலே தாவும் ஏவுகணை விட்டாலும், எதிரியரைத் தாக்கல், இன்பமுறல், தொழிலியற்றல், இரங்கல் என வாழ்வில் யாவைபுரிந் தாலும் எங்க ளெண்ணமெல்லாம்... லெனின்தன் எண்ணத்தோ டெந்நாளும் இணைந்தே இருக்கும்! நற்குணமும் நல்லறமும் நலன்பலவும் லெனினின் நாமத்தின் உள்ளடக்கம்; மானிடத்தின் வாழ்க்கை , கற்பினொடு காதல், புகழ் எல்லாமும், மற்றும் கடல், நதிகள், விளை நிலங்கள், கதிர்விடுக்கும் ஏரி என்பனவும் அவர் பெயரில் இணைந்தபெரும் உண்மை எம்மருமைத் தாய்.!கமாம் உருசியத்தில் எங்கள் அன்டரவர் லெனின்பிறந்த காரணத்தால் சொல்லற் ) கரியபல நன்மையெமை வந்தடையக் கண்டோம் !