பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓக்க நின்று சலியாமல் உழைப்பதுவே அவன் கடனாம். உழைப்பும் இதயத்தின் உறுதியும் தான் வெற்றியினை - அழைத்துவரும் அணித்தாக என்பதையும் , அவனறிவான். எதிர்பாரா வகையினிலே எய்தியதோர் புதுப்பதவி இது ; எனினும் இன்னல்கள், எதிர் ப்புக்கள், சிரமங்கள் | புடை சூழ்ந்த காலத்தும் தளராது போராடி அடைந்திட்ட திறலாண்மை , அரியபுகழ், கள்ளமற்ற இதயத்தின் பேரார்வம் இன்ன வற்றின் நம்பகத்தால் பதவியிதை வரப்பெற்றான் ; இப் புதிய பதவியிலும் மீட்டுமவன் வேகமுடன் மூர்க்கமுடன் தொலைதூரக் காட்டினிலே சென்றாங்கே கரத்தாலும் கருத்தாலும் ஈடுபட்டுப் பணிபுரிவான் ; இன்றைக்கே அவன்வாழும் : நாடும் வனமாய்ஓர் நாளில் இருந்ததுதான்! மேன்மேலும் முன்னேறிச் செல்வதன்றி வேறுவழி தானில்லை ; ஆதலினால், தனிமையிலே இருள்செறிந்த அரவமற்ற தெருவழியே மனைநோக்கி அவன் நடந்தான். இரவினிலே அவன் மனத்தில் எத்தனையோ சிந்தனைகள் ; சந்தித்த பலமனிதர், சாதித்த காரியங்கள், முந்திக் கடந்துவிட்ட வருடங்கள் முதலியவை எண்ணத்தில். எழுந்தனவே ; இழந்துவிட, மறந்துவிடப் பண்ணாத எண்ணங்கள் ; பலப்பலவாம் அவற்றினிலே வெப்பமிலை, தட்பமிலை; வேதனையோ, பெருமகிழ்வோ கொப்பளித்துப் பொங்கவிலை ; கூறினால், அவன் வழியில் பற்பலவாம் படுகுழியும் பயங்கரமும் எதிர்வந்து " முற்படவே எத்தனிக்கும் ; முழுத்தோல்வி அடைவோமோ என் றஞ்சி மனங்கவன்று ஏங்குகின்ற வேளையிலே வென்றியுமே எதிர்பாரா விதத்தினிலே வந்தெய்தும்! உண்மையெனும் தெள்ளிய நீர் ஊற்றால்தன் தாகத்தைத் தண்மையுறத் தீர்த்திருந்த தகவுடையோன் அவன் ;- " அதனால், சிலசமயம் எவனோவோர் சிறுமதியன் அவன்மீது அலர் தூற்றி அவன் வாழ்வை அழித்தொழிக்கப் '.. பார்த்தாலும்