பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. கோடையின் முடிவு நிக்கொலாய் அசயேவ் கரடும் மெருகும் கலந்திடும் என்றன் கவிதைகள் யாவும் காட்டுப் புல்வெளிப் பரப்பின் வெம்மையும் குளுமையும் கலந்து " பக்குவம் செய்த படைப்புகள் ஆகும் ! துயரொடு கரடும், துவர்ப்பொடு மெருகும் துணையுறப் பிணைத்துச் சுருட்டியே, குளிரும், வியருறும் கொதிப்பும் விரவிக் கலந்து விளையாட் டயரும் படைப்புகள் ஆகும் ! இவ்விளை யாட்டை மானிடன் இங்குதான் " இஷ்டப் படியே தேர்ந்தான் இல்லை! தவ்விடும் அண்ட சராசரத் தோடு ஜகமே ஆடுமோர் சம்பவம் ஆகும் ! இவ்வித மாய்என் கவிதைகள் யாவும் என்றும் உலகை இயக்கிக் கறங்கும் செவ்வியின் காலச் செல்கதி யோடு சேர்ந்தே இயங்கும் சிறப்புடைத் தாகும் !