பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. ஏகமனதான தீர்மானம் ---


--- --- - -- மைக்கேல் விளாடியோவ் அன்றைக் காலையும், அந்நாள் படித்த அந்தச் செய்தியும் ஆயுள் முழுதும் என்றும் என்றன் இதய வரங்கில் ' இறவா திருக்கும்! எவ்வெவர் மனத்தும் . அரும்பிய உணர்ச்சி! அகமகிழ் வுணர்ச்சி! அயனப் பயணச் செய்தியை! அந்நாள் தெரிந்துளம் விம்மித் துடித்திட, தேகம் சிலிர்த்திடும். உணர்ச்சி! செய்தியைக் கண்ணால் பார்த்தேன்! படித்தேன்! பரவசம் உற்றேன்! பார்வையை அகற்றப் பலமிலா தானேன்! சீர்த்திகள் மலிந்து சிறந்திடும் எங்கள் தேசத் தெதிர் நாள் சித்திரம் கண்முன் , நின்றிடக் கண்டேன்! இருபெரும் நெறியால் நேருற இருபத் தாண்டுகள் நொடியில் சென்றிடக் கண்டேன்! இதுவரை தெரியாத்' தேனொளி சிதறத் திருத்தாய் நாடு ஒளிவிடக் கண்டேன்! ஒவ்வொரு சொல்லும் உத்தமன் லெனினின் ஒண்மையை வாரி அளித்திடக் கண்டேன்! ஆனந்த வாழ்வுக் கானதோர் திட்டத் ததனின் வெற்றி , . மேவிடக் கண்டேன்! "விவாதம் செய்ய வேண்டிய தென்று வெளியிட்டிருந்தும் ஆவலின் அந்நாள் யாவரும் அதனை அங்கீ கரித்தார்! அதனையும் கண்டேன்!,