பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

138

  • எந்தக் கொள்கைகளுக்காகவும் லட்சியத்திற்காகவும் நீங்கள் பாடுபடுகிறீர்களோ, அந்தக் கொள்கை, அந்த லட்சியத்திற்காக உங்களைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் ” என்று கடிதம் எழுதினார் . காந்தி ஜவஹருக்கு.

"நம்மிடையே கருத்து வேற்றுமை இருப்பது உண்மை ஆயினும் நமது திட்டத்தில் புரட்சிகரமான மாறுதல், ஏற்படுத்தாதவரை நாம் ஒத்துப் போவது சாத்தியமே !” என்று எழுதினார் பாபு ராஜேந்திர பிரசாத்,

இவ்விதம் இருக்கும்போது எதற்காக ஜவஹரை ராஷ்டிரபதியாக்க வேண்டும் ? க | ங் கி ர ஸ் வலது சாரியினரையும் இடது சாரியினரையும் ஒருங்கே அழைத்துச் செல்லும் ஆற்றல் ஜவஹ ருக்கே உண்டு. எனவே ஜவஹர் ராஷ்டிரபதி ஆனார். காங்கிரஸ் சோஷலிஸ்டுகளின் ஆதரவு ஜவஹருக்கு உண்டு; அதாவது இடது சாரிகளின் ஆதரவு; காந்தியின் ஆதரவும் ஜவஹருக்கு உண்டு. அதனால் வலது சாரிக்காரர்கள் வாயை மூடிக் கொண்டு இருந்தார்கள். எனவே ஜவஹர் ராஷ்டிரபதி (தலைவராக) தேர்ந்தெடுக்கப்பட்டார்,

சோஷலிஸத்திலே நம்பிக்கையும் உறுதியும் கொண்ட ஜவஹர் தம் தலைமை உரையில் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டிருந்த சோர்வை வெகுவாகக் கண்டித்தார்.

கூட்டாட்சி என்ற போர்வையில் ஆங்கில அரசு ஏவ்வாறு இந்நாடு சமஸ்தான மன்னர்களுக்கு அதிகப் படியான இடங்களை ஒதுக்கி, அவர்களை பகடையாக வைத்து காங்கிரஸின் கோரிக்கைகளை தகர்த்தது என்று விளக்கினார். மாகாணங்களில் கவர்னரே அதிக பலம் பொருந்தியவர்; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிகளும் அல்ல; முதன் மந்திரியும் அல்ல. கவர்னர் வேண்டாமென நினைத்தால் சட்டசபைகளைக் கலைக்கலாம்.